பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல சன்டிவி செய்தி வாசிப்பாளரும் பங்கேற்கிறார்... யாருன்னு பாருங்க!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சன் தொலைக்காட்சியில் பணியாற்றும் பிரபல செய்தி வாசிப்பாளரும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. நிகழ்ச்சி தொடர்பாக வரிசையாய் புரமோக்கள் வெளியாகி வருகிறது.

கடந்த 4 சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இதுவரை வெளியான அனைத்து புரமோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குக் வித் கோமாளி கண்மணி

குக் வித் கோமாளி கண்மணி

இந்நிலையில் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்க உள்ள நிலையில் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அதன்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் அகத்தியனின் மகளும் இயக்குநர் திருவின் மனைவியுமான கனி பங்கேற்பதாக கூறப்படுகிறது.

ஷகீலாவின் மகள் மிலா

ஷகீலாவின் மகள் மிலா

இதேபோல் நடிகை ஷகீலாவின் மகளான மிலாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சுனிதாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. மேலும் விஜய் டிவியின் தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

போட்டியாளர்கள் தனிமை

போட்டியாளர்கள் தனிமை

மேலும் சார்பட்டா பரம்பரை நடிகர் சந்தோஷ், கோபிநாத் ரவி, ஷாலு ஷம்மு உள்ளிட்டோரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறப்படுகிறது. மேலும் இறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி

சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி

இந்நிலையில் கடந்த சீசனை போல் இந்த சீசனிலும் சன்டிவியின் பிரபல செய்தி வாசிப்பாளர் ஒருவர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சன் டிவி மெயினில் செய்தி வாசிக்கும் இளம் செய்தி வாசிப்பாளரான கண்மணி பங்கேற்கிறார் என கூறப்படுகிறது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

கடந்த சீசனில் சன் டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பங்கேற்றார். அனிதா சம்பத் சரியாக பிக்பாஸ் விதிமுறைகளை பின்பற்றியதோடு டாஸ்க்குகளையும் சரியாக செய்தார். இதானால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

படங்களிலும் நடிக்கும் அனிதா

படங்களிலும் நடிக்கும் அனிதா

ஆனால் அவரது கோபத்தால் இறுதி வரை செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டார். இருப்பினும் அடுத்தடுத்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். மேலும் படங்களிலும் நடித்து வருகிறார் அனிதா சம்பத்.

போட்டியாளர்களின் போட்டோ

போட்டியாளர்களின் போட்டோ

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள போட்டோ என நடிகை ஷாலு ஷம்மு உட்பட 5 பேர் உள்ள போட்டோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அதில் சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணியும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X