சன் டிவியில் புதிய சீரியல் ஆரம்பம்... ராதிகாவுடன் இணைகிறார்கள் அண்ணாத்தயின் அத்தை மகள்கள்?

சென்னை : தொலைக்காட்சிகளில் என்னதான் வித்தியாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப பட்டாலும் டிவி சீரியல்களுக்கு மவுசு குறையவில்லை.

சீரியல்களில் தாய்க்குலங்கள் தான் எப்போதுமே கவனம் செலுத்தும். ஆனால் தற்காலங்களில் ஆண்களும் டிவி சீரியல்களை வெகுவாக ரசிக்கிறார்கள்.

இதையொட்டி ஒவ்வொரு சேனலும் வித்தியாச வித்தியாசமான தலைப்புகளில் டிவி சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் தற்போது சன்டிவி புதிய சீரியல் ஒன்றுக்கு அடித்தளம் போட்டு உள்ளது.

வித்தியாசமான தொடர்கள்

வித்தியாசமான தொடர்கள்

தொலைக்காட்சிகளில் வித்தியாசம் வித்தியாசமான நிகழ்ச்சிகள் பல தேர்ந்தெடுத்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதற்கென மெனக்கெட்டு ஒரு டீம் உட்கார்ந்து மூளையை கசக்கி பிழிந்து நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்காக கொடுத்து வருகின்றன.

அதிகமாக பார்க்கப்படும் சீரியல்கள்

அதிகமாக பார்க்கப்படும் சீரியல்கள்

ஆயினும் தொலைக்காட்சிகளில் மிகவும் அதிகமாக பார்க்கப்படுவது தொலைக்காட்சித் தொடர்கள் மட்டுமே. இதற்கென மிகப் பெரிய மார்க்கெட் காணப்படுகிறது. கடந்த காலங்களில் வீட்டில் இருக்கும் தாய்மார்கள் மட்டுமே தொலைக்காட்சி தொடர்களை பார்த்து வருவதாக கலாய்த்து வரப்பட்டது. ஆனால் தற்காலங்களில் வீடுகளில் இருக்கும் ஆண்களும் தொலைக்காட்சி தொடர்களை பார்த்து வருகின்றனர். சிலர் ஸ்மார்ட்போன்களின் வழியாகவும் தொலைக்காட்சி தொடர்களை தொடர்ந்து வருகின்றனர்.

மாசான ரசிகர்கள்

மாசான ரசிகர்கள்

அந்த வகையில் மிகப் பெரிய மாசான வியூவர் ஷிப்பை தொலைக்காட்சி தொடர்கள் பெற்றுள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் தங்களது சேனலில் வித்தியாச வித்தியாசமான தலைப்புகளில் புதிய புதிய தொடர்களை தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன.

விஜய் டிவி சீரியல்கள்

விஜய் டிவி சீரியல்கள்

வித்தியாச வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் விஜய் டிவி கூட இதில் சற்றும் குறையவில்லை. தன்னுடைய சேனலில் வித்தியாச வித்தியாசமான தொடர்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது விஜய் டிவி. பழைய முகங்கள் பெரிய ஹீரோயின்கள் என்று தொடர்களில் வலம் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு அழகான புதிய ஹீரோயினை வைத்துக் கொண்டே தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த புதிய முகங்கள் ஒரு சில நாட்களிலேயே ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆகிவிடுகின்றனர்.

பாரதிகண்ணம்மா சீரியல்

பாரதிகண்ணம்மா சீரியல்

ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான தொடர் பாரதி கண்ணம்மா. அந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்துவந்த ரோஷினி தொடரில் இருந்து விலகிய நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் அதிக அளவில் காணப்பட்ட அந்த தொடர் தற்போது சற்று ரேட்டிங்கில் குறைந்துள்ளது. இதன்மூலம் ரசிகர்கள் ஒரு முகத்தை பரிட்சயப் படுத்தி விட்டால் அவர்களை ஒதுக்குவதில் தயக்கம் காட்டுகின்றனர் என்பது தெரியவருகிறது.

குடும்பத்தில் ஒருவராக மாறும் சீரியல் கதாபாத்திரங்கள்

குடும்பத்தில் ஒருவராக மாறும் சீரியல் கதாபாத்திரங்கள்

தங்கள் குடும்பத்தில் ஒருவர்களாக சீரியல் நாயகிகளை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். வில்லத்தனம் காட்டுபவர்களை அவர்கள் எளிதாக ஒதுக்குகின்றனர். அவர்களது நடிப்பு அந்த அளவுக்கு அவர்களை ரீச் ஆகி விடுகிறது.

சன் டிவி தொடர்கள்

சன் டிவி தொடர்கள்

சன் டிவியிலும் ரோஜா உள்ளிட்ட பல தொடர்கள் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் சன் டிவி பல புதுப்புது தொடர்களை தற்போது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்ய காத்திருக்கிறது. ராதிகா சரத்குமார் நடிப்பில் சித்தி உள்ளிட்ட தொடர்கள் மிகுந்த செல்வாக்கு மிக்கவையாக இருந்தன.

தற்போது இதை கருத்தில் கொண்டு சன் டிவி புதிய தொடர் ஒன்றுக்கு திட்டம் தீட்டி வருகிறது. ராதிகா சரத்குமார், குஷ்பு,மீனா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட அவர்கள் இந்த தொடரில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொங்கு மண்டலத்தில் இதன் ஷூட்டிங் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.

டிஆர்பி போட்டியில் சன் டிவி

டிஆர்பி போட்டியில் சன் டிவி

மற்ற சேனல்களில் வரும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னேறி வரும் நிலையில் அந்த சீரியல்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் தற்போது ராதிகா உள்ளிட்டவர்களை கொண்டு இந்த புதிய தொடரை இயக்க சன்டிவி திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராதிகா, குஷ்பு உள்ளிட்டவர்கள் சிறப்பான பல சீரியல்களை சன் டிவிக்கு கொடுத்துள்ளனர். அந்த நேரத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் அந்த சீரியல்கள் காணப்பட்டன. இந்நிலையில் தற்போது மற்ற சேனல்களில் வரும் சீரியல்களுக்கு மக்கள் நகர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்களை மீண்டும் சன் டிவிக்கு இழுக்க சன் டிவி நிர்வாகம் தீர்மானித்து இந்த புதிய தொடரை திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X