பொங்கலுக்கு சன் டிவியில் சகுனி, அரவான், எந்திரன் போடுறாங்க...
தைத் திருநாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். விடுமுறை தினத்தில் வீட்டில் இருக்கும் தமிழர்களுக்கு பொழுது போக்க டிவி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தயாராகிவருகின்றனர்.
சன் டிவியில் பொங்கல் விடுமுறைதினத்தை ஒட்டி வேங்கை, அரவான், சகுனி, எந்திரன், வெடி, வேட்டைக்காரன், ஏராளமான திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர்.
இதில் பல திரைப்படங்கள் ஏற்கனவே ஒளிபரப்பியிருந்தாலும் சகுனி, அரவான் மட்டும் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஒளிபரப்புகின்றனர்.

சன் டிவி ஸ்டூயோ வலம்
ஜனவரி 14பொங்கல் தினத்தன்று நடிகர் கார்த்தி சன் தொலைக்காட்சியின் ஸ்டூடியோவிற்குள் வலம் வருகிறார். அங்கு தொகுப்பாளர்களுடன் கலகலப்பாக பேசும் நிகழ்ச்சி ‘மாமா சூட்டிங் பார்க்கப் போறேன்' காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

பட்டிமன்றம் இல்லாத பொங்கலா?
சன் டிவியில் எந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சி என்றாலும் சாலமன் பாப்பையா குழுவினரின் நகைச்சுவை பட்டிமன்றம் இடம் பெறும். பொங்கல் பண்டிகையை ஒட்டி காலை 9.30 மணிக்கு ‘சின்னச் சின்னப் பொய்கள் வாழ்க்கைக்கு சுகமே! சுமையே!' என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.

பொங்கல் சிறப்பு திரைப்படம்
பொங்கல் தினத்தன்று காலை 10.30க்கு நடிகர் தனுஷ், தமன்னா நடித்த வேங்கை திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மதியம்1.30 மணிக்கு ஆதி, தன்ஷிகா நடித்த அரவான் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மாலை 6 மணிக்கு கார்த்தி, பிரனிதா நடித்த சகுனி ஒளிபரப்பாகிறது.

இளமையான விஜய்
திரை உலகிற்கு விஜய் நடிக்க வந்து 20 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் வகையில் சன் டிவியில் திங்கள் மாலை 5 மணிக்கு விஜய் 20 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

சந்தானம் காமெடி
மாட்டுப்பொங்கல் தினத்தன்று காலை 8 மணிக்கு ‘காமெடி லட்டு' சந்தானம் குழுவினர் தங்களின் நகைச்சுவை அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து சென்னையில் ஒருநாள் முன்னோட்டம் ஒளிபரப்பாகிறது. சரத்குமார், ராதிகா சரத்குமார், சென்னையில் ஒருநாள் படக்குழுவினருடன் ஒரு சந்திப்பு

நாதஸ்வரப் பொங்கல்
நாதஸ்வரம் தொடர் குழுவினர் கொண்டாடும் பொங்கல் செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நாதஸ்வரம் தொடரில் நடித்துள்ள நடிகர்கள் கோவை சுந்தராபுரம், சிங்கம்புணரி ஆகிய ஊர்களில் பொங்கல் கொண்டாடியுள்ளனர்

கிராமிய கலை நிகழ்ச்சிகள்
காணும் பொங்கல் தினத்தில் காலை 7 மணிக்கு நம்ம ஊரு ஆட்டம் கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. காலை 8 மணிக்கு ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு' திரைப்பட நட்சத்திரங்களின் விளையாட்டுப்போட்டிகள் ஒளிபரப்பாகிறது.

காணும் பொங்கல் திரைப்படம்
புதன்கிழமை காலை 11 மணிக்கு விஜய், அனுஷ்கா நடித்த வேட்டைக்காரன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. பிற்பகல் 2 மணிக்கு பிரசாந்த், மீரா ஜாஸ்மின் நடித்த மம்பட்டியான் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











