For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிரியாமானவள் சீரியல் போரடிக்குது... கொலை கேஸை சீக்கிரம் முடிங்கப்பா...

  By Mayura Akilan
  |

  சென்னை: ஒரே ஒரு கொலை பண்ணிட்டு அந்த கொலையை மறைக்க அடுத்தடுத்து கொலை, ஆள் கடத்தல் என்று அல்லாடுகிறார் போலீஸ் டிசி கிரி. கொலைக்கான ஆதாரம் உள்ள பென் டிரைவ் ஒன்றை வைத்துக்கொண்டு அதை வைத்து கடந்த 20 எபிசோடுகளுக்கும் மேலாக ஓட்டுவதால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரியமானவள் சீரியல் போராடிக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரியமானவள் சீரியல் அதிக எதிர்பார்போடு ஒளிபரப்பானது. அன்பான குடும்பம் அழகான மகன்கள், மருமகள்கள் என அமைதியாக வாழும் உமாவிற்கு டிசி கிரி ரூபத்தில் சனியன் நுழைய அது முதல் ஒரே போரட்டம்.

  சதீஷ் கொலை வழக்குதான் இப்போதைக்கு சீரியலின் முக்கிய கருவாக உள்ளது. அந்த கொலையை மறைக்க சாட்சிகளை வரிசையாக கொள்கிறார் டிசி கிரி. கதையானது கொலை, விசாரணை என்றே நகர்வதால் சமீப காலங்களில் போரடிக்க ஆரம்பித்து விட்டது. இதனால் டிஆர்பியிலும் பின் தங்கி வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

  கொலை வழக்கு விசாரணை

  கொலை வழக்கு விசாரணை

  சதீஷ் கொலை வழக்கில் விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்துவதும், அந்த கொலைக்கு சாட்சியாக இருந்தவர்களை கொல்வதும் போலீசுக்கு எளிதாக இருக்கிறது. நேர்மையான அதிகாரி ரத்தினத்தை டிராபிக் பிரிவுக்கு மாற்றிவிட்டு, மீண்டும் கிரியே விசாரணை அதிகாரியாக வந்துள்ளது சீரியலை இழுக்கத்தான்.

  பென் டிரைவ்

  பென் டிரைவ்

  கொலைக்கான ஆதாரத்தை பென் டிரைவில் வைத்துக்கொண்டு மிரட்டிய இன்ஸ்பெக்டர் பிரபுமணியை கொலை செய்து விட்டார்கள். அந்த கொலையில் கிருஷ்ணனின் மகன்களை சிக்க வைக்க முயற்சி செய்கிறார் கிரி. ஆனால் அதில் இருந்து ரத்தினம் மூலம் தப்பிக்கிறார்கள்.

  குட்டிப்பையனின் சுட்டி

  குட்டிப்பையனின் சுட்டி

  கிருஷ்ணன் குடும்பத்தினர் தேடும் பென்டிரைவ் உமாவின் உறவுக்கார குட்டிப்பையன் மூலம் அவர்கள் கைகளுக்கே வருகிறது. ஆனால் அதை வாங்காமல் சுத்தலில் விடுகின்றனர். அதை தேடி 4 எபிசோடு நகர்த்துகின்றனர்.

  கடத்தல் நாடகம்

  கடத்தல் நாடகம்

  ஒருவழியாக பென் டிரைவ் கைக்கு கிடைத்தும் அதை கோர்ட்டில் கொடுக்க முடியாத அளவிற்கு செக் வைக்கிறார் கிரி. உமாவின் கணவர் கிருஷ்ணனை கடத்த, கதை மேலும் இழுக்கிறது. கிருஷ்ணனை மீட்க, கிரியின் வீட்டில் வந்து அவரது மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுகின்றனர் கிருஷ்ணனின் மகன்கள்

  சீரியல் ஒரே போர்

  கடந்த 20 எபிசோடுகளாகவே பிரியமானவள் டிவி சீரியல் கொலை, விசாரணை, பென்டிரைவ் என்று நகர்வதால் போராடிக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் போட ஆரம்பித்து விட்டனர். கொலை கேஷை சீக்கிரம் முடிங்கப்பா என்றும் கூற ஆரம்பித்து விட்டனர்.

  பின் தங்கிய பிரியமானவள்

  பின் தங்கிய பிரியமானவள்

  கொலை கேஸை சுற்றியே கதை நகர்வதால் கடந்த வாரங்களில் பிரியமானவள் சீரியல் பின் தங்கிவிட்டதாகவே தெரியவந்துள்ளது. சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தெய்வமகள் முதலிடத்திலும் வம்சம் இரண்டாவது இடத்திலும் இருக்க பிரியமானவள் சீரியல் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. குலதெய்வம், வாணி ராணி சீரியல்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

  சந்தோசம் எப்போ வரும்

  சந்தோசம் எப்போ வரும்

  பிரியமானவள் தொடரின் மகிழ்ச்சியான மாமியார் உமா இப்போது எல்லாம் ஒரே டென்சனாகவே இருக்கிறார். என்னோட உமா அக்கா இப்படி இருக்க மாட்டாங்க. காபி குடிக்க வச்சிட்டுதான் பேசவே ஆரம்பிப்பாங்க. இப்போ சரியில்லை என்று போலீஸ் ஆபிசர் கூறுவார். உமா குடும்பத்தை மறுபடியும் சந்தோசமா மாத்துங்கப்பா என்கின்றனர் சீரியல் ரசிகர்கள். இயக்குநர் கேட்பாரா? இல்லை கதையை இழுப்பாரா?

  English summary
  Vikatan team nowadays priyamanaval is very dull and somewhat boring. Always showing jail, police, villain family and group scenes in which only some people are allowed to talk(shout) and others are made to stand dumb. Please show some happy moments and solve this case asap.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X