Iniya:அம்மியில் அரைக்க சொல்லும் நல்லசிவம்.. காரத்தை அள்ளிக் கொட்டும் கௌரி.. இனியா தொடரில் சுவாரஸ்யம்
சென்னை : சன் டிவியின் சீரியல்களில் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது இனியா தொடர். இந்தத் தொடர் தொடர்ந்து டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று சேனலின் இரண்டாவது தொடராக நீடித்து வருகிறது.
விஜய் டிவியிலிருந்து விலகிய நடிகை ஆல்யா மானசா, இந்தத் தொடரில் இனியாவாக அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
தன்னுடைய துறுதுறு நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டுள்ள ஆல்யா மானசா, இந்தத் தொடர் முன்னணியில் இருப்பதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளார்.

இனியாவின் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் : சன் டிவியின் முக்கியமான தொடராக ரசிகர்களை கவர்ந்து வருகிறது இனியா தொடர். குறுகிய காலத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்றுள்ள இந்தத் தொடர், சேனலின் இரண்டாவது தொடராக கவனம் ஈர்த்துள்ளது. முதல் தொடராக கயல் சீரியல் உள்ளது. இனியா தொடரில் நாயகியாக நடித்துவரும் ஆல்யா மானசா, தன்னுடைய துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார்.
விஜய் டிவியின் ராஜா ராணி தொடரிலிருந்து விலகிய ஆல்யா மானசா, தன்னுடைய குழந்தை பிறப்பை தொடர்ந்து தற்போது சன் டிவியின் இனியா தொடரில் இணைந்துள்ளார். மிகக்குறைந்த காலத்திலேயே இந்த தொடர் இரண்டாவது இடத்தை பெறுவதற்கு அவர் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளார். சீரியலின் கதைக்களமும் மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. அடுத்த லெவலில்தான் மற்ற நடிகர், நடிகைகளின் நடிப்பை சேர்க்க முடியும்.
இந்நிலையில் இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சமையலில் அம்மியில் மசாலா அரைத்துதான் சமைக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர் நல்லசிவம். மகன்கள் வளர்ந்து திருமணமும் முடிந்த நிலையில், அவருக்கு கட்டுப்பட்டு, இன்னமும் டைனிங் டேபிளில்கூட அமராத அவரது மனைவி கௌரி. இத்தகைய குடும்பத்தில் வாழ்க்கைப்படும் இனியா, தன்னுடைய கணவனின் அன்பை பெறுவதற்கும் அதிகமாக செயல்பட வேண்டியுள்ளது.
இதனிடையே, இந்த வயதிலும் தன்னுடைய மாமனாரின் அராஜகத்திற்கு கட்டுப்பட்டு, அடிஉதை படும் தன்னுடைய மாமியாரிடம், பெண்கள் அடங்கி போக வேண்டிய அவசியம் இல்லை என்பதை புரிய வைக்கிறார் இனியா. இதனால் தன்னுடைய கணவனை எதிர்க்கும் துணிச்சல் கௌரிக்கு ஏற்படுகிறது. மிக்ஸி கூட பயன்படுத்தக்கூடாது என்று கூறும் நல்லசிவம், ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நான்வெஜ் சமையலை அரக்கப்பரக்க செய்து முடிக்கும் கௌரியிடம் அம்மியில் மசாலா அரைத்து மீண்டும் சமைக்கக் கூறுகிறார். வாசனை வரவில்லை என்று அவரது தங்கை குடும்பத்தினர் அவரை ஏற்றி விடுகின்றனர்.
இதனால் கடுப்பாகும் கௌரி, இனியா உள்ளிட்டவர்கள் தடுத்தும், அம்மியில் மசாலா அரைத்து குழம்பு வைக்கிறார். ஆனால் இதில்தான் ட்விஸ்ட். தான் வைக்கும் குழம்பில் தன்னுடைய கணவன் மற்றும் அவரது தங்கையின் குடும்பத்தினர் நாக்கு வெந்துப் போகும் அளவிற்கு காரத்தை சேர்த்து அரைக்கிறார். இதனிடையே அம்மியில் அரைத்து செய்த குழம்பிற்காக பரபரப்பாக காத்திருக்கின்றனர் நல்லசிவம் மற்றும் அவரது தங்கை குடும்பத்தினர்.

அதிகாரத் தோரணையுடன் கௌரியை பரிமாற சொல்கிறார் நல்லசிவம். அவர் அந்த காரமான குழம்பை பரிமாற, ஆசையுடன் சாப்பிடும் அவர்கள், நாக்கு வெளித்தள்ள தவிக்கின்றனர். அருகில் தண்ணீரும் இல்லாத நிலையில், கௌரி உள்ளே சென்று தண்ணீர் எடுத்துவந்து தரும்வரை காத்திருந்து அதை குடித்து தங்களை ஆசுவாசப்படுத்துகின்றனர். தொடர்ந்து கமிஷனர், அவர்கள் வீட்டிற்கு வர, அவர் அவர்களை தொடர்ந்து சாப்பிட சொல்கிறார்.
தொடர்ந்து அந்த காரமான சாப்பாடையே சாப்பிடும் நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. அவர் சென்றவுடன், தன்னுடைய மனைவியை அடிக்க செல்கிறார் நல்லசிவம். இடையில் புகுந்து தடுக்கும் இனியா, தான்தான் குழம்பில் அதிக காரத்தை கொட்டியதாக பழியை தன்மீது ஏற்றுகொள்கிறார். இதனால் இனியா மீதான நல்லசிவத்தின் கோபம் பன்மடங்கு அதிகரிக்கிறது. அவரை எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என்று அவர் யோசிக்கிறார்.


Click it and Unblock the Notifications











