Iniya :தம்பியை ஏமாற்றி கையெழுத்து வாங்கும் விக்ரம்.. இனியா தொடரில் புதிய ட்விஸ்ட்!

சென்னை : சன் டிவியின் முன்னணி தொடர்கள் வரிசையில் குறுகிய காலத்திலேயே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது இனியா தொடர்.

விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் பிரபலமாக இருந்த ஆல்யா மானசா லீட் கேரக்டரில் நடித்துவரும் இந்தத் தொடருக்கு ஏராளமான ரசிகர் வட்டம் காணப்படுகிறது.

தன்னுடைய துறுதுறு நடிப்பால் இனியா தொடருக்கு சிறப்பை கூட்டி வருகிறார் ஆல்யா மானசா.

Sun Tvs Iniya serial new episodes makes fans more thrilling

தம்பியை ஏமாற்றி கையெழுத்து வாங்கும் விக்ரம் : பெண்களை அடக்கி ஆள நினைக்கும் மாமனார் நல்லசிவம், வளர்ந்த மூன்று குழந்தைகளுக்கு தாயான நிலையில், அவரது ஆளுமைக்கு உள்ளாகும் அவரது மனைவி கௌரி, அவர்களின் மருமகளாக வரும் ஆல்யா மானசா என அடுத்தடுத்த கேரக்டர்கள் இந்தத் தொடரில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. தன்னை யாருமே எதிர்க்காத வகையில் குடும்ப உறுப்பினர்களை தனக்கு கீழே அடக்கி வைத்திருந்த நல்லசிவத்தை மருமகள் இனியா எதிர்க்க, அங்கே வருகிறது பிரச்சினை.

இந்தத் தொடர் 150 எபிசோட்களை நெருங்கும் நிலையில், அதற்குள்ளாகவே சன் டிவியின் டாப் சீரியல்களில் கயல் தொடரை தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சேனலின் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பிடித்து சுந்தரி உள்ளிட்ட தொடர்களை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தத் தொடரில் ஆல்யா மானசாவின் அழகு, கவர்ச்சி மற்றும் சிறப்பான நடிப்பை சன் டிவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Sun Tvs Iniya serial new episodes makes fans more thrilling

தொடரில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நல்லசிவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக வீட்டின் பெண்கள் ஒன்று சேர்கின்றனர். நல்லசிவத்தை தொடர்ந்து ஏற்றிவிடும் அவரது தங்கை குடும்பத்தை வீட்டை விட்டு துரத்த அவர்கள் திட்டமிடுகின்றனர். இதனிடையே, தன்னுடைய மனைவி இனியாவை ஏற்றுக் கொள்ள கால அவகாசம் கேட்கிறார் விக்ரம். அவருக்கு அவ்வப்போது அவரது செயல்பாடுகளுக்கு ஏற்ப மார்க் போடுகிறார். அதிக மார்க்குகள் வாங்கும்போது இவர்கள் இருவரும் இணைவதும் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால் உள்ளுக்குள் தன்னுடைய மனைவி குறித்து மிகப்பெரிய அபிப்ராயத்தை வைத்துள்ளார் விக்ரம். தன்னுடைய அம்மாவிற்கு பிறகு தன்னுடைய தேவைகளை இனியா பார்த்து பார்த்து செய்வது அவரை உற்சாகப்பபடுத்துகிறது. அவருக்கு 100க்கு 100 மார்க்கே கொடுக்கலாம் என்றும் ஆனால் தான் கொடுக்கும் மார்க்குகளை பார்த்து இனியா சந்தோஷப்படுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் விக்ரம் தனக்குள் கூறிக் கொள்கிறார்.

Sun Tvs Iniya serial new episodes makes fans more thrilling

இந்நிலையில், இனியாவின் அப்பா திருவாசகத்திற்கு மூளையில் பிரச்சினை என்றும் அதற்காக அவருக்கு ஆபரேஷன் செய்வதற்கு 50 லட்சம் செலவாகும் என்பதை அறிந்துக் கொள்ளும் விக்ரம், அவரது ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்கிறார். உடனடியாக 50 லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தன்னுடைய தம்பி இளங்கோவும் தானும் இணைந்து போட்ட எப்டிஐ இடையிலேயே க்ளோஸ் செய்கிறார். அதற்காக இளங்கோவிடம் பொய் சொல்லி அவரிடம் கையெழுத்து வாங்குகிறார்.

விக்ரம் படித்து பார்க்கவில்லையா என்று கேட்க இளங்கோவும் இப்படி தன்னுடைய அண்ணன் பேசுவது தனக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளதாக வேதனை படுகிறார். இந்த அளவிற்கு தன்னை நம்பும் தன்னுடைய தம்பியை ஏமாற்றி 8 லட்சம் ரூபாயை தான் எடுப்பது குறித்து விக்ரம் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். இதுகுறித்த உண்மை தெரிந்தால் இளங்கோவின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைத்தான் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X