Iniya :உயிருக்கு போராடும் இனியாவின் அப்பா.. கைக்கொடுக்க தவிக்கும் விக்ரம்!

சென்னை : சன் டிவியின் முக்கியமான தொடராக குறுகிய காலத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது இனியா தொடர்.

இந்தத் தொடரில் ஆல்யா மானசா நாயகியாக நடித்து வருகிறார். அவர் இனியா என்ற டைட்டில் கேரக்டரில் நடித்து வருகிறார். அவரது கணவராக விக்ரம் கேரக்டரும் கவனத்தை பெற்றுள்ளது.

இந்தத் தொடர் தற்போது சேனலின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதனால் சீரியல் குழுவினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

Sun TVs Iniya serial new promo makes fans more sad on Iniyas father

உயிருக்கு போராடும் இனியாவின் அப்பா :

சன் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது இனியா தொடர். இந்தத் தொடர் விரைவில் 150வது எபிசோடை எட்டவுள்ளது. இந்நிலையில் இந்தத் தொடர் தற்போது சேனலின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. குறைந்த காலத்திலேயே ஏராளமான ரசிகர்களை இந்தத் தொடர் தற்போது கவர்ந்துள்ளது. இதனால் டிஆர்பியிலும் அதிகமான புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் நடித்து வந்த ஆல்யா மானசா, தன்னுடைய இரண்டாவது குழந்தை பிறப்பிற்காக அந்தத் தொடரிலிருந்து விலகினார். குழந்தை பிறந்தவுடன் அவர் மீண்டும், விஜய் டிவியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சன் டிவியின் இனியா தொடரில் அவர் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். அவரது கணவராக விக்ரம் கேரக்டரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்தத் தொடரில் தன்னுடைய மனைவி இனியாவை ஏற்றுக் கொள்ள கால அவகாசம் கேட்கும் காவல் அதிகாரி விக்ரம், ஆனாலும் அவரை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் அவர்மீது தொடர்ந்து அன்பை செலுத்துவதாக காட்டப்படுகிறது. அவர் தன்னுடைய அலுவலகத்திற்கு மதிய உணவு எடுத்து செல்லாத நிலையில், ரோஜா பூவுடன் அவர் மதிய உணவை தன்னுடைய மனைவிக்கு அன்பாக அனுப்பி வைப்பதாக காட்டப்படுகிறது. இதுபோன்ற கணவன் வாய்ப்பதானால், எவ்வளவு காலங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் விக்ரம், அங்கு இனியாவின் அப்பா திருவாசகத்தை பார்க்கிறார். ஆனால் விக்ரமை பார்க்கும் அவரோ, ஓடி ஒளிகிறார். இதனால் சந்தேகமடையும் விக்ரம், அவரது உடலுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து அவரது தனிப்பட்ட மருத்துவரிடம் காத்திருந்து விசாரிக்கிறார். அவர் உடனடியாக எதையும் கூறாவிட்டாலும், விக்ரம் தன்னுடைய உறவை சொல்லி கேட்கும்நிலையில், உண்மையை கூறுகிறார்.

திருவாசகத்திற்கு கடந்த ஒரு ஆண்டாக, ப்ரெயின் ட்யூமர் உள்ளதாகவும் அவரிடம் ஆபரேஷன் செய்துக் கொள்ளும்படி தான் வலியுறுத்தினாலும் அவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக காத்திருந்ததாகவும் மருத்துவர் கூறுகிறார். மேலும் அந்த ஆபரேஷன் செய்தால் பிழைப்பதற்கு 50 சதவிகிதம் மட்டுமே சான்ஸ் உள்ளதாகவும் அதற்கு 50 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் மருத்துவர் கூறுகிறார். இதனால் மிகுந்த அதிர்ச்சியடையும் விக்ரம், தன்னுடைய மனைவிக்காக தன்னுடைய மாமனார் உயிரை தான் காப்பாற்றுவேன் என்று சபதமேற்கிறார்.

Sun TVs Iniya serial new promo makes fans more sad on Iniyas father

தன்னுடைய குடும்பத்தினரின் சந்தோஷத்திற்காக எதையும் செய்ய காத்திருக்கிறார் இனியா. ஆனால் அவருக்கு உயிராக அவரது அப்பா திருவாசகம் காணப்படுகிறார். திருமணமான நிலையிலும், தன்னுடைய மொபைலில், தன்னுடைய தந்தையின் வாய்சைதான் அவர் அலர்ட்டாக வைத்திருப்பதாக தோழியிடம் கூறுகிறார். அவர்தான் தன்னுடைய உயிர் என்றும் கூறுகிறார். இந்த நிலையில், அவரது பிரச்சினையை விக்ரம் தீர்ப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X