Iniya :மடமடன்னு முன்னணியில் ஆல்யா மானசா சீரியல்.. எந்த இடத்துல இருக்குன்னு பாருங்க!

சென்னை : சன் டிவியின் அடுத்தடுத்த சீரியல்கள் டிஆர்பியின் முன்னணியில் உள்ளன. அந்த வரிசையில் கயல் சீரியல் முதலிடத்தில் உள்ளது.

இதனிடையே, சமீபத்தில் துவங்கியுள்ள சன் டிவியின் புத்தம்புதிய தொடரான இனியா, தற்போது டிஆர்பியில் முன்னணியில் காணப்படுகிறது.

சன் டிவியின் அடுத்தடுத்த சீரியல்கள், காலை முதல் இரவு வரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்தத் தொடர்கள் முன்னிலையில் உள்ளன.

Sun TVs Iniya serial tops second in TRP rating

டிஆர்பியில் முன்னணியில் இனியா தொடர் :

பொதுவாகவே ஒவ்வொரு சேனலிலும் நிகழ்ச்சிகளுக்கு இணையான வரவேற்பை சீரியல்கள் பெற்று வருகின்றன. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என சேனல்களுக்குள் அதிகமான போட்டி நிலவி வருகிறது. இந்த சேனல்களில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் தொடர்ந்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்து டிஆர்பியிலும் சிறப்பான இடங்களை பெற்று வருகின்றன. அந்த வகையில், சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கயல், இனியா, சுந்தரி உள்ளிட்ட தொடர்களுக்குள் பலத்த போட்டி காணப்படுகிறது.

சன் டிவியில் கயல் தொடர் சீரியல்களின் டிஆர்பியில் முதன்மையான இடத்தை தொடர்ந்து பிடித்து வருகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு, தன்னுடைய சுற்றத்தாருக்கிடையில், தன்னுடைய குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக போராடும் கதைக்களத்தை மையமாக கொண்டு, இந்தத் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது அவருக்கான திருமண பந்தத்தையும் முன்வைத்து இந்த தொடர் தற்போது எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சன் டிவியில் துவங்கிய இனியா தொடர், தற்போது 150 எபிசோட்களை நெருங்கவுள்ளது. விஜய் டிவியில் தொடர்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துவந்த ஆல்யா மானசா, தற்போது இனியா தொடர் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். இந்தத் தொடர் தற்போது இந்த ஆண்டின் 20வது வாரத்தை எட்டியுள்ளது. மற்ற சன் டிவி தொடர்களை பின்னுக்கு தள்ளி தற்போது இரண்டாவது இடத்தை இனியா பிடித்துள்ளது.

கயல் தொடர் சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் உள்ள நிலையில், இனியா 9.16 டிவிஆருடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் உள்ள கயல் 10.24 புள்ளிகள் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் சன் டிவியின் வானத்தைப் போல தொடரும், நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் எதிர்நீச்சல் மற்றும் சுந்தரி தொடர்களும் இடம் பிடித்துள்ளன. சன் டிவியில் சீரியல்கள் எப்போதுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் நிலையில், தற்போது அடுத்தடுத்த தொடர்கள் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூகவலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படும் ஆல்யா மானசா, தொடர்ந்து அடுத்தடுத்த வீடியோக்கள், ரீல்ஸ்கள், புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். விஜய் டிவியின் முக்கியமான தொடர்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், குழந்தை பிறப்பிற்காக அந்தத் தொடரிலிருந்து விலகினார். மீண்டும் அதே தொடரில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இனியா தொடர் மூலம் சன் டிவியில் கலக்கி வருகிறார். தொடரில் இவரது நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. டிஆர்பியில் இந்தத் தொடர் இரண்டாவது இடத்தை பிடித்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்றே ரசிகர்கள் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X