மீராவுக்கு யுவா எப்பவும் அழகுதான்... சிறப்பான கண்ணான கண்ணே ப்ரமோ

சென்னை : கடந்த 2020 நவம்பர் மாதத்தில் கண்ணான கண்ணே தொடர் துவங்கப்பட்டது.

பல்வேறு திருப்பங்களுடன் இந்த தொடர் ரசிகர்களை கவர்ந்து சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதய நோயால் அவதிப்படும் 5 மாத குழந்தை உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்

இந்த தொடரில் மீரா மற்றும் யுவாவிற்கு இடையிலான கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பாக காணப்படுகிறது.

கண்ணான கண்ணே தொடர்

கண்ணான கண்ணே தொடர்

நடிகர் பிரித்விராஜ் லீட் கதாபாத்திரத்தில் நடித்துவரும் தொடர் சன் டிவியின் கண்ணான கண்ணே. தனுஷ் இயக்கத்தில் பாரதி கண்ணன் வசனத்தில் இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

மீராவின் முயற்சி

மீராவின் முயற்சி

இந்த தொடரில் தனது தங்கை பிரீத்தியின் உதவியால் யுவாவை கைப்பிடிக்கும் மீரா, தனது தந்தையின் அன்பை பெற பெரும் முயற்சி மேற்கொள்கிறார். ஆனால் அது வெறும் கனவாகவே காணப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய தங்கையை மணம் செய்யவுள்ளவரின் உண்மை முகம் தெரியவரும் மீரா அந்த திருமணத்தை தடுக்க முயற்சி மேற்கொள்கிறார்.

சிறப்பான யுவா -மீரா ஜோடி

சிறப்பான யுவா -மீரா ஜோடி

ஆனால் அவரது அதிகபட்சமான முயற்சிகளை மீறி பிரீத்தியின் திருமணம் நடைபெற்று விட, அவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுகின்றனர். அவர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுபவதாக செல்கிறது தொடர். ஆயினும் தங்களது தன்னம்பிக்கையை யுவா -மீரா ஜோடி கைவிடாமல் காணப்படுகிறது.

ரணகளத்திலும் குதூகலம்

ரணகளத்திலும் குதூகலம்

இந்த ரணகளத்திலும் அவர்களது குதூகலம் குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் மீரா, யுவாவை மாமா என்று வாய் நிறைய கூப்பிடுவது அழகாக காணப்படுகிறது. இந்த பிரமோவில் அவர்களது அன்னியோன்யம் மிகவும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ராஜா நீ அழகுதான்

ராஜா நீ அழகுதான்

ராஜா நீ அழகாகத்தான் இருக்க... தலை வாரியது போதும் வா என்று கொள்ளை அன்புடன் மீரா கூறுவதும், தொடர்ந்து அவரைப் பார்த்தது ரொமாண்டிக்காக பழைய பாடல் நினைவுக்கு வருவதாக யுவா உருகுவதுமாக செல்கிறது இந்த பிரமோ.

சிறப்பான சம்பவங்கள்

சிறப்பான சம்பவங்கள்

தனது தங்கையின் வாழ்விற்காக மீராவும் தனது ஆசை மகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக பிரித்விராஜூம் தங்களது வசதி வாய்ப்பை விட்டுவிட்டு வெளியில் வருகிறார்கள். தொடர்ந்து தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள இவர்கள் போராடுவதா செல்கிறது கதை. இனிமேல்தான் இந்த தொடரில் சிறப்பான சம்பவங்கள் உள்ளது என்கிறது படக்குழு

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X