கண்ணான கண்ணே வீட்டுக்கு வந்த புது கெஸ்ட்.. யாருன்னு பாருங்க.. சன் டிவி வெளியிட்ட புது ப்ரமோ!
சென்னை : நடிகர் பிரித்விராஜ், நிமேஷிகா, ராகுல் ரவி உள்ளிட்டவர்கள் இணைந்து நடிக்கும் தொடர் கண்ணான கண்ணே.
சன் டிவியில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த இந்த தொடர் விரைவில் 500 எபிசோட்களை நெருங்கவுள்ளது.
இந்நிலையில் இந்தத் தொடரின் சிறப்பு எபிசோடில் தற்போது பிக் பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.

சன்டிவி தொடர்கள்
சன் டிவியின் சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கடந்த வாரத்தின் டிஆர்பியில் இந்த சேனலின் கயல், வானத்தை போல மற்றும் சுந்தரி ஆகிய சீரியல்கள் முதல் மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளன. மேலும் பல சிரியல்கள் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன.

கண்ணான கண்ணே தொடர்
சன் டிவியின் முக்கியமான தொடராக கண்ணான கண்ணே தொடர் இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் துவங்கப்பட்ட இந்தத் தொடர், தற்போது 500 எபிசோட்களை நெருங்கியுள்ளது. தன்னுடைய தந்தையின் அன்பை பெற ஏங்கும் மீரா கேரக்டரில் நிமேஷிகா இந்தத் தொடரில் கலக்கி வருகிறார்.

சிறப்பான கேரக்டர்கள்
அவருக்கு துணை நிற்கும் கணவனாக ராகுல் ரவி நடித்து வருகிறார். இவர்களுடன் பிரித்விராஜ், அக்ஷிதா போபையா, மானஸ், பிரியா, வினோதினி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. சூப்பர் ஹிட் தொடராக மாறியுள்ள இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

மகளை வெறுக்கும் தந்தை
முதல் மனைவியின் இறப்பிற்கு காரணமாக மீராவை நினைத்துக் கொண்டிருக்கிறார் பிரித்விராஜ். அதனால் அவரை சிறு வயதிலிருந்தே வெறுத்து ஒதுக்குகிறார். இரண்டாவது மனைவிக்கு பிறந்த ப்ரீத்தியை செல்லம் கொஞ்சுகிறார். இதனால் மனதளவில் பரிதவிக்கும் மீரா, தந்தையின் அன்பை பெற தவமிருக்கிறார்.

சிறப்பு எபிசோட்
இவ்வாறு செல்லும் இந்தக் கதையில் இன்றைய தினம் சிறப்பு எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இந்த எபிசோட்டில் பிரபல பிக் பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார். இதுகுறித்த ப்ரமோவை சன் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

நனவாகுமா மீராவின் கனவு?
ஹோட்டல் ஒன்றை வாங்க திட்டமிடும் மீராவின் முயற்சியை தகர்க்க மேனகா சதித்திட்டம் தீட்டி வரும் நிலையில்,மீராவின் கனவு பலிக்குமா என காணத் தவறாதீர்கள் என்று சாக்ஷி இந்தப் ப்ரமோவில் கூறுகிறார். மேலும் குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் மொத்த சந்தோஷமும் அங்கே காணப்படுவதாகவும் அவர் பாராட்டு தெரிவிக்கிறார்.


Click it and Unblock the Notifications











