New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க?

சென்னை: சன் டிவியில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் என்னதான் நினைத்துக் கொண்டு இருகிறார்கள் என்று மற்ற சேனல்காரர்கள் நினைக்கும்படி அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறது சன் டிவி.

புதுப் புது சீரியல்கள், நிகழ்ச்சிகள், தொடர்ச்சியாக படங்கள் என்று சன் டிவியின் ஓட்டம் அதி வேகமாகத்தான் இருக்கிறது. அதே சமயம் ஸ்பீட் பிரேக் தேவை என்பதையும் அவர்கள் மறக்கவில்லை.

மக்களிடம் பெற்ற இடத்தைத் தக்க வைத்துக் கொள்வது என்பதில் சன் டிவி எப்போதும் போராடிக்கொண்டு இருக்கிறது. தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் போராட்டத்தில் பார்க்கப் போனால் சன் டிவிக்கு நிகர் அதுதான்.

மாறாதது மாற்றம்

மாறாதது மாற்றம்

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல, கடந்த ஜூன் மாதம் முதல் சன் டிவியில் அதிரடி மாற்றங்கள்,அடிக்கடி மாற்றங்கள் என்று தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. புதுப்புது சீரியல்கள், அதில் பெரிய பெரிய நடிகர் நடிகைகள் நடிக்கும் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது... சீரியல்களின் நேரத்தை சீரியல்களுக்கு தக்கபடி மாற்றிக் கொண்டிருப்பது என்று நான்கு திசைகளையும் யோசித்து செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து இரண்டு

தொடர்ந்து இரண்டு

ஞாயிறு டபுள்ஸ் என்று தொடர்ந்து இரண்டு படங்களை இடைவிடாமல் ஞாயிறு மாலை, இரவு என்று ஒளிபரப்பி, மக்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சன் டிவி, இப்போது ஞாயிற்று கிழமை மதியம் ஒளிபரப்பும் படங்களிலும் மாற்றத்தை புகுத்தி உள்ளது. ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் படங்களை, புத்தம் புது படங்களாக வாங்கி ஒளிபரப்பவும் திட்டமிட்டு உள்ளது.அதாவது ரிலீஸ் ஆகி ஒன்றிரண்டு வாரங்களே ஆன படங்களை வாங்கி அதிரடியாக ஒளிபரப்பி மக்களை ஈர்க்கத் திட்டமிட்டு உள்ளது.

தலைவலி மட்டுமே

தலைவலி மட்டுமே

சன் டிவிக்கு இப்போதைக்கு பிக்பாஸ் தலைவலி மட்டுமே. அப்படி இப்படி அசந்து கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் பார்த்துவிட கூடாது என்பதில் அதிரடி கவனம் செலுத்துகிறதாம் சன் டிவி. அதாவது, விஜய் டிவியின் பிக்பாஸ் ப்ரோமோவை கூட மக்கள் பார்த்துவிடக் கூடாது என்பதால்தான் இத்தனை சிரத்தை எடுத்து வருகிறது சன் டிவி என்கிறார்கள்.

உலக நாயகன்

உலக நாயகன்

அதுவும் விஜய் டிவியின் வார இறுதி நாட்களில் இரண்டு நாட்கள் உலக நாயகன் வருகிறார்.இதன் ப்ரோமோ தூள் பறக்கிறது. ஒரு ப்ரோமோவைப் பார்த்து விட்டால் கூட மக்களில் சிலர் பிக்பாஸ் வசம் சிக்கிக் கொள்வார்கள் என்பதால், ஞாயிறு மதியம் புத்தம் புது படங்கள், மற்ற நேரங்களில் நல்ல நிகழ்ச்சிகள்,அதிலும் செலிபிரிட்டிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்று களைக் கட்டச் செய்து, ஞாயிறு டபுள்ஸ் என்றும் மக்களை தன் வசம் வைத்துக்கொள்ள போராடி வருகிறது சன் டிவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X