ஆரம்பமாகும் சுந்தரியின் ஆட்டம்... சுந்தரி தொடரின் வேற லெவல் ட்விஸ்ட்

சென்னை : கடந்த 2021 ஜனவரி மாதம் 22ம் தேதி முதல் துவங்கி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சுந்தரி.

சாதாரண கிராமத்து பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மையமாக கொண்டு இந்த தொடர் காணப்படுகிறது.

விருப்பமில்லாத கணவனுடன் சுந்தரிக்கு ஏற்படும் திருமணம் அவளது வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது.

சுந்தரி தொடர்

சுந்தரி தொடர்

கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி முதல் சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் தொடர் சுந்தரி. இந்தத் தொடர் கன்னடத்தில் ஒளிபரப்பான சுந்தரி தொடரின் ரீமேக்காக உருவாகியுள்ளது. தொடரில் கேப்ரில்லா லீட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சிறப்பான கேப்ரில்லா

சிறப்பான கேப்ரில்லா

தன்னுடைய சினிமா கனவிற்காக சென்னையில் தங்கி வாய்ப்பு தேடிய கேப்ரில்லா 30க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளாராம். ஆனால் சுந்தரி தொடர்தான் இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்துள்ளார்.

கலெக்டர் கனவு

கலெக்டர் கனவு

தொடரில் கலெக்டராகும் கனவுடன் காணப்படும் இவருக்கு திருமணம் நடைபெறுகிறது. விருப்பமில்லாத நபருக்கு வாழ்க்கைப்படும் இவர் தொடர்ந்து தன்னுடைய கனவை தொலைத்துவிட்டு வாழ்க்கையை ஓட்டி வருகிறார். தன்னுடைய கணவனின்மீது மிகவும் விருப்பத்துடன் காணப்படுகிறார்.

கணவரின் திருமணம்

கணவரின் திருமணம்

ஆனால், அவரது கணவரோ, வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு திருட்டுத்தனமாக வாழ்க்கையை வாழ்கிறார். இதுகுறித்து தெரியாத சுந்தரி அவரது அன்பை பெறும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இப்படியாக செல்லும் கதையில் தற்போது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

கொதிக்கும் சுந்தரி

கொதிக்கும் சுந்தரி

அவரது மற்றொரு வாழ்க்கை குறித்து சுந்தரிக்கு தெரியவருகிறது. இதையடுத்து கொதிக்கிறார் சுந்தரி. இதுகுறித்து புதிய பிரமோ வெளியாகியுள்ளது. கணவனிடம் ஆத்திரத்தை காட்டுகிறார். அவரது கண் முன்பு கலெக்டராகி உசத்தியாக வாழ்ந்து காட்டுவதாக சவால் விடுகிறார். இனிமேல் சுந்தரியின் ஆட்டத்தை அவர் பார்க்க போவதாகவும் கூறுகிறார்.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

கோபத்துடன் அவரை வெளியே போகுமாறு கூறுகிறார். திங்கள் முதல் சனிக்கிழமை வரை சன்டிவியில் இந்த தொடர் தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. இந்த தொடருக்கு ஏராளமான பெண்கள் மற்றும் ஆண் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X