விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ள பிரபல சன் டிவி தொடர்... ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை :சன் டிவியின் தொடர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. டிஆர்பியிலும் முக்கியமான இடத்தில் உள்ளன.
விஜய் டிவியுடன் போட்டியில் இருந்தாலும் சன் டிவியின் கயல் உள்ளிட்ட தொடர்கள் தான் முதலிடத்தில் உள்ளன.
இதனிடையே ரசிகர்களை நீண்ட காலங்களாக கவர்ந்துவரும் முக்கியமான தொடரை முடிக்கவுள்ளதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன.

ரோஜா தொடர்
சன் டிவியின் டாக் சீரியல்களில் ஒன்றாக உள்ளது ரோஜா தொடர்ந்து இந்த தொடரின் ஹீரோ சிபு சூர்யன், ஹீரோயின் பிரியங்கா உள்ளிட்டவர்கள் எப்போதுமே ரசிகர்களின் பேவரிட் நடிகர்களாக உள்ளனர். தொடர்ந்து இந்தத் தொடர் ஆயிரம் எபிசோட்களை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

டிஆர்பியில் கலக்கல்
டிஆர்பியிலும் இந்தத் தொடர் தொடர்ந்து முன்னணியில் காணப்படுகிறது. முதல் ஐந்து இடங்களில் இந்தத் சீரியல் தொடர்ந்து இருந்து வருகிறது. அர்ஜூன் சார் என்று, இந்தக் கதையின் நாயகி, தன்னுடைய கணவனை கூப்பிடுவது இந்த தொடரின் ஹைலைட்டாக உள்ளது.

ரசிகர்களின் பேவரிட்
தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் இந்தத் தொடரின் நாயகன் சிபு சூர்யன், ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளுக்காக தொடரிலிருந்து விலக நினைத்தபோது, தொடருக்கு ரசிகர்களின் ஆதரவு காரணமாக அவர் அந்த முடிவை கைவிட்டார். அந்த அளவிற்கு ரசிகர்களின் பேவரிட் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி காணப்படுகிறது.

விரைவில் எண்ட்கார்ட்
இதனிடையே இந்தத் தொடர் விரைவில் எண்ட்கார்ட் போடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகவும் பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்துவரும் இந்தத் தொடரை விரைவில் முடிக்க சன் டிவி முடிவெடுத்துள்ளதாம். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.

ஆயிரம் எபிசோட்கள்
ஒரு தொடரை ஆயிரம் எபிசோட்களுக்கு மேலாக தொடர்ந்து ரசிகர்கள் ரசித்து வருவது என்பது மிகவும் பெரிய விஷயம். இதற்காக ஒட்டுமொத்த டீமும் இணைந்து செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் அந்த தொடருக்கு காணப்படுகிறது. குறிப்பாக சீரியல் இயக்குநர் மற்றும் அவரது டீம், மிகுந்த பிரயத்தனத்தை செய்ய வேண்டியுள்ளது.

விரைவில் க்ளைமாக்ஸ்
அந்த வகையில், இந்தத் தொடரின் ஒவ்வொரு கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. தொடரில் வில்லியாக வரும் நடிகை முதல்கொண்டு, அனைத்து கேரக்டர்களும் சிறப்பான வகையில் வடிவமைக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அத்தகைய அனுபவங்களை தந்துவந்த ரோஜா தொடர் நிறைவடையவுள்ளது அதன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே.


Click it and Unblock the Notifications











