'தேவர் மகன்' மூலமாக கமலுக்கு 'அட்வைஸ்' செய்த சன் டிவி!

By Mayura Akilan

ஊரை விட்டுப் போறேன். இந்த ஊர் சரியில்லாவிட்டால் நாட்டை விட்டே போறேன் என்று நேற்று கமல்ஹாசன் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்படியெல்லாம் போகக் கூடாது, இருந்து போராட வேண்டும் என்று அவருக்கு சன் டிவி இன்று காலை அட்வைஸ் கொடுத்தது - அவர் தயாரிப்பில் உருவான தேவர் மகன் பட வசனம் மூலமாக.

தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசனும், கமல்ஹாசனும் பேசும் ஒரு வசனம் ரொம்பப் பாப்புலரானது. அந்த வசனங்களும், சிவாஜியின் நடிப்பும், இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும் செம மிரட்டலானவை.

அந்த வசனத்தைத்தான் இன்று காலை ஒளிபரப்பான நிகழ்ச்சியின்போது காட்டியது சன் டிவி. நேற்று நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து சிவாஜி கணேசன் உயிருடன் வந்து, இப்படியெல்லாம் பேசக் கூடாதுப்பு என்று கமலுக்கு அட்வைஸ் செய்தால் எப்படி இருக்கும்... அப்படி இருந்தது அந்த வசனத்தைக் கேட்டபோது..

அந்த வசனத்தைப் பாருங்களேன்...

ஊரோட நெலமை புரிஞ்சதா...

ஊரோட நெலமை புரிஞ்சதா...

சிவாஜி: ஆஸ்பத்திரிக்கு போனீகளா?

கமல்: ஆமா ஐயா..

சிவாஜி: கோயில் கும்புடறதுக்கு இருக்கேன்னு சண்டை போட்டீகளே.இப்போ இந்த ஊரோட நெலமை புரிஞ்சுதா?

ஊர விட்டே போயிடலாம்னு இருக்கேன்

ஊர விட்டே போயிடலாம்னு இருக்கேன்

கமல்: நல்லாவே புரியுது. நான் செஞ்ச தப்பும் புரியுது..அதுக்கு தண்டனையா இந்த ஊர விட்டே போயிரலாம்னு இருக்கேன்

ஊர விட்டுப் போறேன்னு சொல்றது கோழைத்தனம் இல்லை..?

சிவாஜி: ஊர...ஊர விட்டு போறீகளா??..நடந்ததுக்கு பரிகாரம் தேடாம..ஊர விட்டு போறேன்னு சொல்லுறது கோழைத்தனம் இல்லை??

கமல் :அதுக்காக....

சிவாஜி: அதுக்காக?

இந்தக் கூட்டத்துல நானும் ஒருத்தன்தான்

இந்தக் கூட்டத்துல நானும் ஒருத்தன்தான்

கமல்: அதுக்காக ..நடக்கற காட்டுமிராண்டித்தனத்தை வீரம்னு நெனைச்சுகிட்டு`இருக்கறது முட்டாள்தனம்.

சிவாஜி: இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல உங்கப்பனும் ஒருத்தந்தாங்குறத மறந்துறாத..

கமல்: அப்படி பாத்தா நானும்தான்யா ஒருத்தன். ஆனா அதை நெனச்சு பெருமைப்பட முடியல. இருநூறு வருஷம் பின்தங்கியிருக்கற இந்த கிராமத்துல நான் படிச்ச படிப்பை எல்லாம் வேஸ்ட் ஆக்க விரும்பலைய்யா.

சிவாஜி: இருநூறு வருஷம் பின் தங்கிதான் போயிட்டோம் ஒத்துக்கறேன். ரெண்டாயிரம் வருஷமா வேல்கம்பையும் அறுவாளையும் தூக்கிக்கிட்டு வெற்றிவேல் வீரவேல்னு சுத்திகிட்டு இருந்த பயக. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சண்டைக்கு ஆள் வேணும்னு கேட்டப்போ, ஓடிப்போய் மொத வரிசைல நின்ன பய முக்காவாசிப்பய நம்ம பய தான். திடீர்னு அவன வேல் கம்பை தூக்கிப்போட்டுட்டு விஞ்ஞானம் பேச வாடான்னா எப்படி வருவான்? நீ படிச்சவனாச்சே... கூட்டிகிட்டு வா.. அங்கே கூட்டிகிட்டு வா.. ஆனா அந்தப்பய மெதுவாதான் வருவான்..மெதுவாதான் வருவான்.

போ .. செத்துப் போ...

போ .. செத்துப் போ...

கமல்:மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா? அதுக்குள்ள நான் செத்துருவேன் போல இருக்கே!

சிவாஜி: போ...செத்துப்போ.. நான் தடுக்க முடியுமா?... எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியதுதான். வாழறது முக்கியம் தான் .. இல்லைன்னு சொல்லல. ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போனா அந்த சாவுக்கே பெருமை.

வெதை நான் விதைச்சது...

வெதை நான் விதைச்சது...

வெத வெதைச்ச உடனே பழம் சாப்பிடனும்னு நெனைக்க முடியுமோ... இன்னைக்கு நான் வெதைக்கறேன். நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ.. அப்புறம் உன் மவன் சாப்பிடுவான்..அதுக்கப்புறம் அவன் மவன் சாப்பிடுவான்... அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன். ஆனா வெத.. நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை ஒவ்வொருத்தரோடைய கடமை!!!.

More from Filmibeat

Read more about: kamal கமல் sun tv
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X