எலேய் சன் டிவி நீ ஆர்ட்டிஸ்ட் னு நிரூபிச்சட்டலேனு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.. அப்படி என்ன ஆச்சு?
சென்னை: தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல்களில் சன் டிவி மிகவும் பாரம்பரியமான தொலைக்காட்சி. 80ஸ் கிட்ஸ்க்கு பொதிகை என்றால், 90ஸ் கிட்ஸுக்கு சன் டிவி என்று சண்டை போட்டுக் கொள்வார்கள். சன் டிவி என்றாலே வாரம் முழுவதும் சீரியல், வார இறுதியில் திரைப்படங்கள் என ஒரு கமர்ஷியலான பொழுதுபோக்கு சேனல். இந்நிலையில் வரும் வார இறுதியில் சன் டிவியில் விஸ்வாசம் படம் ஒளிபரப்படுவதால், அது தொடர்பான விளம்பரத்தைப் பகிர்ந்த இணைய வாசி ஒருவர், எலேய் சன் டிவி நீ ஆர்ட்டிஸ்ட் னு நிரூபிச்சட்டலேனு கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சி இந்த வார இறுதியில் விஸ்வாசம் படத்தை ஒளிபரப்ப காரணம் இருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது. அதாவது நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சிக்கும் விதமாக, அப்பாவைக் காணோம் என்று ஒரு குட்டிக் கதை கூறினார். அப்படி இருக்க, அதற்கு கூட்டணிக் கட்சியினரே முதலமைச்சர் விஜய்யை காட்டமாக விமர்சித்தனர்.

இது மட்டும் இல்லாமல் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினோ அவரது எக்ஸ் பக்கத்தில், " குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்" என்று பதிவிட்டு பதிலடி கொடுத்தார். இது தொடர்பான வாதங்கள் மற்றும் பிரதி வாதங்கள் இணையத்தில் தீயாக நடைபெற்று வருகிறது.
விஸ்வாசம்: இப்படி இருக்கையில், சன் டிவியில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி வெளியான விஸ்வாசம் படத்தை வரும் வார இறுதியில் ஒளிபரப்புகிறார்கள். இதற்கான ப்ரோமோவில், " புருஷன் பொண்டாட்டி எல்லாரும் ஒன்னா வந்து காப்பு கட்டுங்கப்பா என்றும் எல்லாரும் அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார்கள்.. நீ மட்டும் தனியாக இருக்கிறாயே என்ற வசனம், பொண்டாட்டிகிட்ட இறங்கிப் போனவன் தோற்றதாக சரித்திரத்திலேயே கிடையாதுப்பா" என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது.

கலாய்: இந்த ப்ரோமோவை பகிர்ந்த இணைய வாசி ஒருவர், எலேய் சன் டிவி நீ ஆர்ட்டிஸ்ட்னு நிரூபிச்சட்டலே என்று கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த இணையாவாசிகள் பலரும் இந்த பதிவை மேலும் கலாய்க்கும் விதமாக பதிவிட்டு வருகிறார்கள். இணையத்தில் இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. காவேரி மேகதாது பிரச்னை குறித்த பேச்சுக்களும் விவாதங்களும் உச்சத்தில் இருக்கும்போது கே டிவியில் கில்லி படத்தை ஒளிபரப்பினர். அதில், “ இவனை மட்டும் கர்நாடகாவுக்கு அனுப்பினால் காவேரியை கையோடு கூட்டீட்டு வந்துடுவான் சார்” என்ற டயலாக்கை திரும்பத் திரும்ப ப்ரோமோவில் ஒளிபரப்பிக்கொண்டு இருந்தனர்.


Click it and Unblock the Notifications