ரஞ்சனி குடும்பத்தை தாக்கப் போகும் சுனாமி...

By Mayura Akilan

தேவயானி இரட்டை வேடத்தில் நடித்து வரும் முத்தாரம் தொடர் 400 வது எபிசோடை நிறைவு செய்திருக்கிறது.

முத்தாரம் தொடரில் கண்டிப்பான காவல்துறை அதிகாரியாகவும், வெகுளித்தனமான இல்லத்தரசியாகவும் நடிகை தேவயாணி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

அக்கா, தங்கை பாசம், கணவர் குடும்பத்தினர் மீது காட்டும் அக்கறை என தொடர் விறுவிறுப்பாகப் போகிறது. ஆரம்பத்தில் அடங்கி நடந்த கணவன், வசதி வந்த உடன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு ரஞ்சனியை சீண்டுகிறான். இதுவரை 400 எபிசோடுகளை எட்டியுள்ள தொடர் இனி விறுவிறுப்பான தொடரை எட்ட உள்ளதாக தொடர் தயாரிப்பாளர் மெட்டி ஒலி சித்திக் தெரிவித்துள்ளார்.

கர்ப்பமான ரஞ்சனி

கர்ப்பமான ரஞ்சனி

திருமணமாகி 7 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாகியிருக்கிறாள் ரஞ்சனி. ஆனால் அந்த சந்தோஷத்தை கூட அனுபவிக்க விடாமல் அவளது கணவன் முரளி கொடுக்கும் சிரமங்கள் ஏராளம்.

தன்னுடைய செட் அப் பெண்ணான சாண்டியின் (சந்தியா) வயிற்றில் வளரும் குழந்தைதான் தன்னுடைய குழந்தை என்று முரளி சொல்வது ரஞ்சனியின் வாழ்வில் மாபெரும் புயலாக உருவெடுக்கிறது.

சிவரஞ்சனியை கொல்ல திட்டம்

சிவரஞ்சனியை கொல்ல திட்டம்

தன் வாழ்வின் சிக்கல்களை சரிசெய்யக்கூட முடியாத பெரும் நெருக்கடியில் ரஞ்சனி தவிக்கிறாள். அதேசமயம் அவளது அக்கா சிவரஞ்சனியை சிறையில் கொல்ல முயற்சி நடக்கிறது.

பெண் தாதா

பெண் தாதா

சிவரஞ்சனியை கொல்வதற்காக ஊட்டியில் இருந்து கிளம்பி வந்திருக்கும் பெண் தாதா காந்தா அவளை கொன்றாளா? அல்லது சிறைக்கு வெளியே இருக்கும் ரஞ்சனி, தன் அக்காவை கொலையில் இருந்து காப்பாற்றினாளா? என்று விறுவிறுப்பான காட்சிகள் இனி ஒளிபரப்பாக உள்ளன.

ரஞ்சனியின் அப்பா

ரஞ்சனியின் அப்பா

ரஞ்சனியை அவமானப் படுத்தி சந்தோஷப்படுவதே தன் வாழ்வின் லட்சியம் என்று இருக்கும் அவளது சீனியர் ஆபீசர் மங்கா (மஞ்சரி) இன்னொரு பக்கம் ரஞ்சனியையே அழித்து விட நினைக்கும் அவளது அப்பா என ரஞ்சனிக்கு சிக்கல்கள் கூடுகின்றன.

பிரச்சினைகள் ஏராளம்

பிரச்சினைகள் ஏராளம்

தன் மகனை போன்ற சூர்யாவின் வாழ்க்கையை சரி செய்வதா, வீட்டுக்குள்ளேயே வைத்து இருக்கும் வெடிகுண்டு போல் எப்போதும் வெடிக்க தயாராக காத்திருக்கும் கார்த்திகாவை தான் சரி செய்வதா? எதை முதலில் எடுப்பது, தீர்ப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் ரஞ்சனிக்கு எதிர்பாராத ஒரு மாபெரும் பேரதிர்ச்சி இனி வரும் கதையில் காத்து இருக்கிறது.

சுனாமியில் இருந்து மீள முடியுமா?

சுனாமியில் இருந்து மீள முடியுமா?

அவளை மட்டுமல்ல... அவள் குடும்பத்தை மட்டுமல்ல.. அவளை சார்ந்த அத்தனை பேரின் வாழ்வையுமே புரட்டிப் போடவிருக்கும் அந்த கிரைம் சுனாமியில் இருந்து ரஞ்சனி தன்னையும் தன் குடும்பத்தையும் எப்படி மீட்கப்போகிறாள்? என்பதை அடுத்த எபிசோடுகளில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுந்தர். கே.விஜயன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X