அடேங்கப்பா... 1000 எபிசோட்களை தொட்ட ரோஜா சீரியல்

சென்னை : சன் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ரோஜா. இதில் சிபு சூரியன், பிரியங்கா நல்காரி ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர். டைட்டில் ரோலான ரோஜா கேரக்டரில் பிரியங்காவும், அவரது கணவர் வழக்கறிஞர் அர்ஜுன் ரோலில் சிபுவும் நடித்து வருகிறார்.

சரிகம நிறுவனம் இந்த சீரியலை தயாரித்து வருகிறது. இந்த சீரியலின் முதல் 48 எபிசோட்களை தனுஷ் இயக்கிய நிலையில், 49 வது எபிசோட் முதல் தற்போது வரை வி.சாதாசிவமும் இயக்கி வருகின்றார். வடிவுக்கரசி, ராஜேஷ், காயத்ரி, டாக்டர்.ஷர்மிளா உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர்.

1000 வது எபிசோட்

1000 வது எபிசோட்

2018 ம் ஆண்டு ஏப்ரம் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் இன்று 1000 வது எபிசோட்டை எட்டி உள்ளது. கொரோனா காரணமாக மற்ற சீரியல்களை போல் ரோஜா சீரியலின் ஷுட்டிங்கும் 2020 ம் ஆண்டு மார்ச் 19 ம் தேதி நிறுத்தப்பட்டது. மூன்று மாத இடைவெளிக்கு பிறகு ஜுலை 27 ம் தேதி முதல் புதிய எபிசோட்கள் ஒளிபரப்ப துவங்கின.

அனுவாக நடிக்கும் பிரியா

அனுவாக நடிக்கும் பிரியா

சிறு வயது முதலே ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் கிரிமினல் வழக்கறிஞரான அர்ஜுன். விபத்தில் பழைய நினைவுகளை இழந்த தனது அத்தை செண்பகத்தின் மகள் தான் ரோஜா என்பதை தெரிந்து கொள்ளும் அர்ஜுன், அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார். இதனால் இறந்து போன செண்பகத்தின் மகள் அனு தான் என சொல்லிக் கொண்டு நடிக்க வருகிறார் பிரியா.

ரோஜா - அர்ஜுன் திருமணம்

ரோஜா - அர்ஜுன் திருமணம்

போலி அனுவிற்கும் அர்ஜுனுக்கும் நிச்சயம் செய்ய குடும்பத்தினர்கள் திட்டமிடுகிறார். ஆனால் அவர் ரோஜாவை திருமணம் செய்து கொள்கிறார். பிறகு அர்ஜுனின் தம்பி அஸ்வினுக்கு அனுவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது. ஆனால் அவரும் தனது காதலியை திருமணம் செய்து கொண்டு, வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளார்.

விறுவிறுப்பான ரோஜா

விறுவிறுப்பான ரோஜா

இதற்கிடையில் ரோஜா தான் உண்மையான வாரிசு என்பதை தெரிந்து கொள்ளும் அனு, அதற்கான ஆதாரங்களை அழித்து விட்டு, தானே வாரிசு என நிரூபிக்க வில்லி சாக்ஷியுடன் இணைந்து பல சதி வேலைகளை செய்கிறார். அவர்களின் சதி வேலைகளை தொடர்ந்து முறியடித்து வருகிறார் அர்ஜுன். இப்படி பல கோணங்களில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது ரோஜா சீரியல்.

4 மொழிகளில் ரீமேக்

4 மொழிகளில் ரீமேக்

தமிழில் துவங்கப்பட்ட ரோஜா சீரியல் பிறகு கன்னடத்தில் செவ்வந்தி என்ற பெயரிலும், இந்தியில் சிந்தூரி கி கீமத் என்ற பெயரிலும், மலையாளத்தில் களிவீடு என்ற பெயரிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தெலுங்கில் ரோஜா என்ற பெயரிலேயே ரீமேக் செய்யப்பட்டும், பிருந்தாவனம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

நான்காவது இடத்தில் ரோஜா

நான்காவது இடத்தில் ரோஜா

ஆரம்பத்தில் பகல் 3 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வந்த ரோஜா சீரியல் பிறகு பிரைம் டைமான இரவு 9 மணிக்கு, பிறகு 7 மணிக்கும் மாற்றப்பட்டது. பிறகு மீண்டும் இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது. 39 வது வார இறுதியில் இந்த சீரியல் சன் டிவி சீரியல்களில் நான்காவது புகழ்பெற்ற சீரியலாக உள்ளது.

Recommended Video

Raja Rani 2 கதையில் ஏற்படும் பெரிய மாற்றம் | Alya Manasa, Sanjeev, Kayal
குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

இந்நிலையில் ரோஜா சீரியல் 1000 வது எபிசோட்டை எட்டி உள்ளதை அடுத்து சீரியல் டீமுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 1000 வது எபிசோட் என்பதால் ஸ்பெஷல் ப்ரோமோ, செம ட்விஸ்ட் ஏதாவது இருக்கும் என்றும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X