ஓடியாங்க... ஓடியாங்க.. புது சீரியல் வந்தாச்சு.. ஹைலைட்ஸ் பார்க்கலாம்!

By Mayura Akilan

தங்கம் தொடரில் ஐயா என்று அழைக்கப்பட்டு 800 எபிசோடுகள் வரை நடித்த நடிகர் விஜயகுமார் புதிய தொடரான வம்சத்தில் அண்ணாச்சி வெற்றிவேல் பாண்டியனாக நடித்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் தயாரித்து நடித்து வரும் புதிய தொடர் வம்சம். குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த தொடரில் ரம்யா கிருஷ்ணன் தாய்மாமாவாக விஜயகுமார் நடித்துள்ளார்.

முந்தைய தொடர்களைப் போல இந்த தொடரிலும் திருமணம் சென்டிமென்ட் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. உறவுகளை ஒன்று சேர்க்க பயணத்தை தொடங்கியுள்ளாராம் ரம்யா கிருஷ்ணன்.

உறவுகள் யார்?

உறவுகள் யார்?

ரம்யா கிருஷ்ணனை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் சொந்த பந்தம் யாரும் இல்லாத வீட்டில் பெண் எடுக்க தயாராக இல்லை என்று கூறிவிட்டு செல்கின்றனர்.

அண்ணாச்சி குடும்பம்

அண்ணாச்சி குடும்பம்

திருநெல்வேலியில் பிரபலமாக உள்ள அண்ணாச்சி வெற்றிவேல் பாண்டியன்தான் தன்னுடைய தாய்மாமா என்றும் அவர்களுடைய குடும்பத்தினர்தான் தன்னுடைய சொந்தம் என்றும் அம்மாவின் மூலம் தெரிந்து கொள்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

கமிஷனர் அண்ணாச்சி

கமிஷனர் அண்ணாச்சி

போலீஸ் கமிஷனராக இருந்த விஜயகுமார் பணியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்ததை அவரது குடும்பமே கொண்டாடுகிறது. மூன்று மகன்கள் மருமகள்கள், ஒரு மகள், விசுவாசமான வேலைக்காரர் சண்முகசுந்தரம் என கலகலப்பான குடும்ப கதை.

வேலைக்காரியாக ரம்யா

வேலைக்காரியாக ரம்யா

வம்சம் தொடரில் சக்தியாக வரும் ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய பெற்றோர்களுடன் தாய்மாமா குடும்பத்தை இணைக்க முடிவு செய்து பயணத்தைத் தொடங்குகிறார். வேலைக்காரப் பெண்ணாக அண்ணாச்சி வீட்டிற்குள் வரும் சக்தியின் மூலம் பிரிந்து போன குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X