»   »  குஷ்புவின் நிஜங்கள் அவுட்.. மகாலட்சுமி, சுமங்கலி, விதி... வரிசைகட்டும் புது சீரியல்கள்!

குஷ்புவின் நிஜங்கள் அவுட்.. மகாலட்சுமி, சுமங்கலி, விதி... வரிசைகட்டும் புது சீரியல்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆயிரம் எபிசோடுகளை தாண்டி பல சீரியர்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சன்டிவியில் புத்தம் புதிய 3 சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளதாக

முன்னோட்டம் போட்டு வருகின்றனர். இந்த சீரியர்கள் திங்கட்கிழமை முதல் 11.30 மணி முதல் 1 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

டிவி சீரியல்களை பார்த்துக்கொண்டே, சமைப்பது, சாப்பிடுவது என இல்லத்தரசிகளின் பொழுது போய்க்கொண்டிருக்கிறது. சன்டிவியில் 18 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

ஒருமணி நேரம் குஷ்பு நடத்தும் நிஜங்களும் ஒளிபரப்பாகிறது. போரடிக்கும் சீரியர்களை எடுத்துவிட்டு டப்பிங் சீரியல்களையும் ஒளிபரப்பி வருகின்றனர்.

நாகினி அவுட்

நாகினி அவுட்

நாகினி டப்பிங் சீரியல் சன் டிவியில் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. ஷிவன்யாவை இனி ரசிகர்கள் பார்க்க முடியாது என்ற கவலையில் இருக்கின்றனர். இதற்கு பதிலாக புதிதாக புத்தம் புதிய சிரியல்கள் ஒளிபரப்பாக உள்ளன.

சுமங்கலி

கணவன் மனைவிக்கு இடையேயான பாசத்தை கூறும் சுமங்கலி சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. பிரபல நட்சத்திரங்கள் இந்த சீரியலில் நடித்து உள்ளனர். இது நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

மகாலட்சுமி

மகாலட்சுமி

தந்தை மகள் பாசத்திற்கு இடையேயான பாசப்போராட்டத்தைக் கூறும் டிவி சீரியல் மகாலட்சுமி பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் புதுமுகங்கள் அதிகம் நடித்துள்ளனர்.

விதி

விதி

பொம்மலாட்டம் சீரியலில் பாரதியாக நடித்த நாயகி விதி சீரியலில் நிலாவாக நடிக்கிறார். சான் மீடியா தயாரித்துள்ள இந்த சீரியல் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

குஷ்புவின் நிஜங்கள் அவுட்

குஷ்புவின் நிஜங்கள் அவுட்

சன்டிவியில் பிற்பகல் 12.30 மணியில் இருந்து 1.30 மணிவரை குஷ்புவின் நிஜங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு இல்லையோ என்னவோ அந்த நேரத்தில் இரண்டு சீரியல்கள் ஒளிபரப்புகின்றனர். குஷ்புவிற்கு என்ன ஆயிற்றோ அல்லது நிஜங்களை வேறு நேரத்திற்கு மாற்றி விட்டார்களோ என்னவோ? சன்டிவிக்கே வெளிச்சம்.

English summary
Sumangali, Mahalakshmi and Vidhi Serials by Sun TV airs in the prime time slot of Tamil television channel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil