இனி இல்லத்தரசிகள் 6 நாளும் அழுங்க!

By Mayura Akilan

சன் டிவியில் இனி சீரியல்கள் அனைத்து சனிக்கிழமையும் ஒளிபரப்பாகும் என்று விளம்பரம் செய்யப்படுகிறது.

சன் டிவியில் ஒரே சீரியல் மயம்தான் காலை 10.30 மணி தொடங்கி இரவு 11 மணிவரைக்கும் மொத்தம் 18 சீரியல்கள் வரை ஒளிபரப்பாகிறது.

சன் டிவி மட்டுமல்லாது ராஜ் டிவி, ஜெயாடிவி, கலைஞர், ஜீ தமிழ், விஜய்டிவி, பாலிமர் என பல சேனல்களிலும் வார நாட்களில் சீரியல்தான். சில சேனல்களில் இந்தி சீரியல் டப்பிங் வேறு. எல்லா சீரியல்களையும் மாறி மாறி பார்த்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து வில்லத்தனமும் செய்து வந்தனர்.

சன் டிவியில் இதுநாள் வரை வார நாட்களில் மட்டுமே ஒளிபரப்பான சீரியல்கள் இனி சனிக்கிழமையும் ஒளிபரப்பாகுமாம்.

சன் டிவியில்

சன் டிவியில்

சன் டிவியில் காலை 10.30 மணிக்கு மருதாணி தொடங்கி இரவு 10.30 மணிக்கு அழகி வரை மொத்தம் 15க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.

சனிக்கிழமையும் கூட

சனிக்கிழமையும் கூட

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலைமுதல் இரவு வரை ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் இனி சனிக்கிழமையும் ஒளிபரப்பாக உள்ளது.

ஒரே அழுகைதான்

ஒரே அழுகைதான்

எந்த சீரியலும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. இருதார திருமணத்திற்கு ஆதரவு, நாத்தனார், மாமியார் கொடுமை, கூட இருந்தே குழி பறிப்பது என எல்லா சீரியலும் ஒரே ரகம்தான்.

டப்பிங் சீரியல்கள்

டப்பிங் சீரியல்கள்

நேரடி தமிழ் சீரியல்களாவது கொஞ்சம் பரவாயில்லை ரகம் என்றாலும் டப்பிங் சீரியல்களில் ஆர்ப்பாட்டமான நகைகளும், உடை அலங்காரமும், தமிழ் சேனல்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத வில்லத்தனமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆண்கள் கதி?

ஆண்கள் கதி?

வீட்டில் அதிகம் சீரியல் பார்ப்பது இல்லத்தரசிகளும், பெரியவர்களும்தான். ஏதாவது செய்தி சேனல்பக்கம் ரிமோட்டை மாற்றினால் அடுத்த நிமிடமே பிரளயம்தான். அதுவும் விளம்பர இடைவேளையில்தான் மாற்ற முடியும். சனிக்கிழமையன்று முழுக்க வாண்டுகள் ராஜ்ஜியம்தான். கார்டூன் சேனல்கள் பார்க்கிறேன் பேர்வழி என்று ரிமோட்டை கைப்பற்றி விடுவார்கள். அவர்களுக்கும் வேட்டு வைக்கும் விதமாக இனி சனிக்கிழமையும் சீரியல் ஒளிபரப்புகின்றனராம். ஆண்கள்தான் பாவம் என்ன செய்யப் போகின்றனரோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X