'முறைமாமன்கள்' வர்றாங்க.. பார்க்கத் தவறாதீர்கள்!
சென்னை: சன் டிவியின் இந்த வார ராத்திரிக் கொண்டாட்டம் முறை மாமன்களுக்கானது... அதாவது இது முறை மாமன் வாரம். முறைமாமன்கள் கதையை மையமாகக் கொண்ட படங்களாகப் போட்டுக் கொளுத்தப் போகிறார்களாம்.
எல்லோருக்கும் சோ்ம வாரம், புத வாரம், சனிவாரம்தான் தெரிந்திருக்கும். ஆனால் முதல் முறையாக சினிமா வாரத்தைக் கொண்டாடிய டிவி சன் டிவிதான். ஒரு காலத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த 'டாப்பிக் பேஸ்ட்' படங்களுக்கு செமத்தியான வரவேற்பு இருந்தது. இந்த பழைய பாணியை சமீபத்தில் மீண்டும் தொடங்கியது சன் டிவி.
அந்த வகையில் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான வாரத்தை முறை மாமன் வாரமாக கொண்டாடப் போகிறது சன்.
திங்கள்கிழமையன்று சத்யராஜ், மீனா நடிப்பில் வெளியான தாய்மாமன் படம் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

புதன்கிழமையன்று விஜயகாந்த், ரஞ்சிதா நடிப்பில் வெளியான பெரியமருது ஒளிபரப்பாகிறது. பாடல்களுக்காகவும், சண்டைக் காட்சிகளுக்காகவும் பேசப்பட்ட படம் இது.
வியாழக்கிழமை இரவு பிரபு, கனகா உள்ளிட்டோர் நடித்த பெரிய குடும்பம் வெளியாகிறது.
வெள்ளிக்கிழமையன்று சுந்தர்.சி, நமீதா, நதியா ஆகியோரது நடிப்பிலும், விவேக்கின் காமெடியிலும் உருவான சண்டை ஒளிபரப்பப்படுகிறது.
'முறைமாமன்'களைத் தரிசிக்க மக்களே தயாராகிக்கோங்க...!


Click it and Unblock the Notifications











