இதுக்கு அட்லீயே பரவாயில்லை.. குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியில் புதிய ஷோ.. ரசிகர்கள் கலாய்!

சென்னை: விஜய் டிவியில் வெளியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை அசத்தப் போவது யாரு நிகழ்ச்சி என அப்போதே சன் டிவியில் அட்டு காப்பியடித்து நிகழ்ச்சியை உருவாக்கினர். ஏகப்பட்ட நிகழ்ச்சி விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட பல சேனல்களில் ஒளிபரப்பாகி வருகின்றன.

சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக பல்வேறு நிகழ்ச்சிகள் வெளியான நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக ’டாப்பு குக்கு டூப்பு குக்கு’ எனும் புதிய ஷோ விரைவில் சன் டிவியில் வெளியாக போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Sun Tv Top Cooku Dupe Cooku promo compared with Cook with Comali and gets trolled

சபாஷ் சரியான காப்பி: குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கடந்த நான்கு சீசன்களாக செஃப் தாமு உடன் இணைந்து செஃப் வெங்கடேஷ் பட் நடத்தி வந்தார். திடீரென இந்த சீசனில் அவர் வெளியேறி விட்டார் என்றும் அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் நடுவராக களம் இறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. நேற்று தொடங்கிய குக் வித் கோமாளி சீசன் ஐந்து நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் தாமு அந்த நிகழ்ச்சியை தொடங்கினர்.

குக் வித் கோமாளி சீசன் 5: விஜய் டிவியில் கலக்கி வரும் குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் போட்டியாளர்களாக யூடியூபர் இர்ஃபான், பிரியங்கா தேஷ்பாண்டே, டெஸ்லா குயின் திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பல போட்டியாளர்களும் கோமாளிகளாக புகழ், குரோஷி, ராமர், மணிமேகலை உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். அமர்க்களமாக அந்த நிகழ்ச்சி ஏப்ரல் 27-ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது அதற்கு போட்டியான நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் கலாய்: ’டாப்பு குக்கு டூப்பு குக்கு’ எனும் டைட்டிலில் உருவாக்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் நடுவராக வெங்கடேஷ் பட் களம் இறங்கியுள்ளார். பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜி.பி முத்து, மோனிஷா பிளஸி, கேபிஒய் தீனா, தீபா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். குக் வித் கோமாளி அளவுக்கு ரசிகர்களை இந்த நிகழ்ச்சி கவர்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த புரோமோவை பார்த்த ரசிகர்கள் சன் டிவி அட்லியையே தூக்கி சாப்பிட்டு விட்டது என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X