TRP Rating :கடந்த வார டிஆர்பியில் முன்னணியில் இடம்பெற்ற சீரியல்கள்.. பார்க்கலாம் வாங்க!

சென்னை : சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் என ஒவ்வொரு சேனலும் போட்டிக் போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளையும் தொடர்களையும் ஒளிபரப்பி வருகின்றன.

அந்த வகையில் நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் தான் முதன்மை போட்டி நிலவி வருகிறது. இந்தப் போட்டியில் தன்னுடைய அதிகமான சீரியல்களை டிஆர்பியில் முதல் 10 இடங்களில் இடம்பெற செய்து சன் டிவி முன்னிலையில் உள்ளது.

இதில் மற்ற சேனல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு சன் டிவியின் 5 சீரியல்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளன. விஜய் டிவி சீரியல்கள் பின்தங்கியுள்ளன.

Sun TV tops this week tamil serial TRP rating and Vijay TV in second position

இந்த வார தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங் : சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. எப்போதுமே டிவி நிகழ்ச்சிகளை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கடந்த கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கிய மக்கள், தங்களுக்கு விருப்பமான தொடர்களையும் நிகழ்ச்சிகளையும் அதிகமாக பார்க்கத் துவங்கியுள்ளனர்.

இதனால் ரசிகர்களை கவரும் வகையில் அடுத்தடுத்து புதிய புதிய தொடர்கள், நிகழ்ச்சிகளை சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பி வருகின்றன. ஒரு நிகழ்ச்சியோ, தொடரோ சரியாக போகவில்லை என்றால் உடனடியாக அதற்கு என்ட் கார்ட் போடவும் சேனல்கள் தயங்குவதில்லை. அதேபோல, ரசிகர்களை கவர்ந்த பல பழைய தொடர்களையும் மீண்டும் ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

கடந்த சில வாரங்களாக சன் டிவி, விஜய் டிவியில் அதிகமான தொடர்கள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், புதிய தொடர்களை சேனல்கள் களளமிறக்கி வருகின்றன. அந்த வகையில், சன் டிவியின் இனியா தொடர், ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. இதில் ஆல்யா மானசாவின் துறுதறு நடிப்பு ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை இந்தத் தொடர் கொடுத்து வருகிறது.

அந்த வகையில் சன் டிவியின் கடந்த வார டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று சன் டிவியின் அடுத்தடுத்த தொடர்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. இதில் கயல், இனியா, வானத்தை போல, எதிர்நீச்சல், சுந்தரி, மிஸ்டர் மனைவி என அடுத்தடுத்த சன் டிவியின் 6 தொடர்கள் இந்த வார டிஆர்பியில் முதல் 6 இடங்களை பிடித்துள்ளன. ஏழாவதாக விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் எட்டாவது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த டிஆர்பி பட்டியலில் 9வது இடத்தில் சன் டிவியின் ஆனந்தராகம் மற்றும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியின் பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்ந்து இந்த பட்டியலில் முதலிடங்களில் இருந்த நிலையில், தற்போது விஜய் டிவி சீரியல்கள் கீழே இறங்கியுள்ளன. ஆனாலும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் குறைந்தபட்சம் முதல் 10 இடங்களிலாவது இடம்பெற்றுள்ளது ரசிகர்களுக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X