லாரன்ஸும் தனுஷும் சன் டிவியை காப்பாற்றுவார்களா!
சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் நடக்கும் போட்டியில் யார் வென்றார்கள் என்பது அடுத்த வாரம் தெரியை வரும்.
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் போது, தனது டிஆர்பியை தக்க வைக்க சன் டிவி லாரன்ஸையும், தனுஷையும் நம்பி இருந்தது.
கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. 15 போட்டியாளர்களில் ரித்விகா, விஜி, ஐஸ்வர்யா ஆகியோர் இறுதி வரை வீட்டில் இருக்கின்றனர்.

இவர்களில் யார் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். எனவே எல்லோர் வீட்டிலும் விஜய் டிவி தான் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் விஜய் டிவிக்கு போட்டியாளராக இருக்கும் சன் டிவி, தனது பார்வையாளர்களை தக்க வைக்க லாரன்ஸையும், தனுஷையும் நம்பி அவர்களது படங்களை ஒளிபரப்பியது.
மாலை ஆறு மணிக்கு லாரன்ஸ் நடித்த காஞ்னா 2 படத்தை சன் டிவி ஒளிப்பரப்பியது. அதைத்தொடர்ந்து தனுஷ் நடித்த விஐபி படத்தை ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கிறது.
இதனால் தனது ரசிகர்களை தக்க வைக்க முடியும் என சன் டிவி நம்புகிறது. ஆனால் பிக் பாஸிடம் இது பலித்ததா என அடுத்த வாரம் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் தான் தெரியவரும்.


Click it and Unblock the Notifications