ஏகோபித்த பாராட்டைப் பெற்ற வாணி- ராணி சீரியல்! ட்விட்டரில் லைவ்வாக கொட்டிய பாராட்டு மழை!!

By Mayura Akilan

சன்டிவியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரவு 9.30 மணிக்கு டிவியில் ஒளிபரப்பாகும் நேரத்தில் அதை பார்க்கும் நேயர்கள் ராதிகாவின் ட்விட்டரில் பக்கத்தில் போய் ஒவ்வொரு காட்சிக்கும் தங்கள் கமெண்ட்டுகளை லைவ் ஆக கொட்டி இன்னொரு சீரியலை இணையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.

பூமிநாதன், சாமிநாதன் சகோதரர்களை திருமணம் செய்து கொண்ட சகோதரிகள் வாணி, ராணி. ஒரே வீட்டில் வசித்தாலும் பாசத்தோடு இருந்தாலும் 20 ஆண்டுகளாக சகோதரிகள் பேசாமல் இருந்தனர்.

தம்பி சாமிநாதன் குடும்பத்தை வீட்டை விட்டு விரட்ட சூழ்ச்சி செய்த பூமிநாதன், அதை சாதிக்கிறார். அதுவரை தங்கை ராணியிடம் பேசாமல் இருந்த வாணி, அதுமுதல் பேசுகிறார். வீட்டை விட்டு வெளியே போகுமாறு கூறுகிறார்.

பிரிந்த குடும்பம்

பிரிந்த குடும்பம்

சகோதரிகள் இடையே பிரிவு வர, அதுவே சிக்கலை ஏற்படுத்துகிறது. வாணியின் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினை பூமிநாதனை மாற்றுகிறது.

திருந்திய பூமிநாதன்

திருந்திய பூமிநாதன்

வில்லனாக இருந்த பூமிநாதன், அதுமுதல் நல்லவனாக திருந்தி வாழ்கிறான். ஆனால் அதை சாமிநாதன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். ஆனாலும் குடும்பத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது.

சரவணனின் காதல்

சரவணனின் காதல்

ராணியின் மகன் சரவணனை மாமன் மகள் பூங்கொடி காதலிக்க அதை ஏற்க மறுக்கிறான் சரவணன். ஆனால் மற்றொரு அத்தை மகன் கார்த்திக்கிற்கு மணமுடிக்கின்றனர் அவளது குடும்பத்தினர்.

ராணி குடும்பத்தில் சிக்கல்

ராணி குடும்பத்தில் சிக்கல்

தனியாக வந்த ராணி தன் கணவனுக்கு ஹோட்டல் வைக்க ஏற்பாடு செய்கிறாள். ஆனால் கந்து வட்டி கும்பல் கதிர் மூலமாக அதிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஹோட்டலை எழுதி வாங்கிக் கொண்டு சாமிநாதனையும், சரவணனையும் அடித்து அனுப்புகின்றனர். ஆனால் ஹோட்டல் திரும்ப வாங்க வாணி முயற்சிக்கிறாள்.

தொலைந்த பணம்

தொலைந்த பணம்

கணவனிடம் விவாகரத்து வாங்கிவிடுகிறேன் என்று பூங்கொடி சொன்னதைக் கேட்ட சரவணன், வசூலித்த பணத்தை தொலைத்து விடுகிறான். அது கந்துவட்டி கும்பலின் கையில் சிக்கியுள்ளதாக நினைத்து கறுப்பு என்பவனை தாக்குகிறான் சரவணன்.

தலைமறைவு வாழ்க்கை

தலைமறைவு வாழ்க்கை

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த கறுப்பு இறந்துவிட்டதாக நினைத்து தலைமறைவாகிறான் சரவணன். ஆனால் அவனது அண்ணன் கதிர் மூலம் சிக்கல் உருவாகிறது. சரவணனை கொல்ல நடவடிக்கை எடுக்கிறான்.

சிறைக்கு போன கதிர்

சிறைக்கு போன கதிர்

ஆனால் வாணி தன்னுடைய முயற்சியினால் கதிரை சிறைக்கு அனுப்புகிறாள். கோமாவில் இருந்த கறுப்பு உடல் நலம் தேறி வருகிறான். சரவணனை பழிவாங்க நினைக்கிறான்.

சாமிநாதனின் கோபம்

சாமிநாதனின் கோபம்

தன் மகனின் சிக்கலுக்கு காரணம் வாணிதான் என்று கூறி சத்தம் போடவே அக்காவிற்கு ஆதரவாக பேசிய ராணி வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

காப்பாற்றிய வாணி

காப்பாற்றிய வாணி

தலைமறைவான சரவணனை காப்பாற்றி தன்வீட்டிற்கு கொண்டுவந்து வைத்திருக்கிறாள் வாணி. ஆனாலும் அவனை கொல்ல கதிர் சகோதரர்கள் திட்டமிடுகின்றனர்.

ஹீரோவான கௌதம்

ஹீரோவான கௌதம்

ஆனால் அது நடக்கவில்லை என்பதால் சாமிநாதனை கடத்துகிறான். இதற்கு பதிலடியாக கறுப்புவின் மகளை கடத்தி செக் வைக்கிறான் கௌதம். இதுவே காதலாக மாறுகிறது. ஆனால் கௌதம் இந்த காதலை ஏற்க மறுக்கிறான்.

பூமிநாதனுக்கு செக்

பூமிநாதனுக்கு செக்

இதனிடையே தேவியின் திருவிளையாடல் பூமிநாதனுக்கு வினையாக வந்து முடிகிறது. அவனிடம் கையெழுத்து வாங்கிய பத்திரங்களை வைத்துக்கொண்டு மிரட்டுகிறான் கறுப்பு. சரவணனை ஒப்படைக்க கேட்கிறான். இங்கிருந்துதான் புதிய பரபரப்பு கதையில் ஏற்படுகிறது.

பூமிநாதனின் திட்டம்

பூமிநாதனின் திட்டம்

இதுவரை கோபமாக இருந்த சாமிநாதன் மகள் தேனுவின் விஷேசத்தின் மூலம் ராணியிடம் ராசியாகிறான். அத்துடன் பூமிநாதனும் ரொம்ப நல்லவர் போல சரவணனை தனது நண்பரிடம் ஒப்படைக்க வெளியூருக்கு அனுப்பப்போவதாக வாக்குறுதி அளிக்கிறார்.

பரபரப்பான நிமிடங்கள்..

பரபரப்பான நிமிடங்கள்..

சரவணனை கறுப்புவிடம் ஒப்படைக்கத்தான் பூமிநாதன் அழைத்துச் செல்கிறான் என்பது தெரிந்த நிலையில் நேற்றைய ஒளிபரப்பு முழுவதும் சரவணனை வழி அனுப்புகிற பாசக் காட்சிகளாகவே இருந்தது. உள்ளத்தில் வில்லத்தனத்துடன் பூமிநாதன் சரவணை அழைத்து செல்லும் காட்சிகள், உண்மையான தாயுள்ளத்துடனும் பாசத்துடன் மற்றவர்கள் வழியனுப்பும் காட்சிகள்.. பரபர.. நெகிழ்வுகள்தான் போங்கள்..

ராணியின் அட்வைஸ்

ராணியின் அட்வைஸ்

அதுவும் மகன் வெளியூர் போகும் போது கண்ணீர் மல்க அனுப்பி வைக்கும் ராணி, அங்கே ரசம் சாதம், தயிர் சாதம் சாப்பிடு, உடம்புக்கு எதுவும் செய்யாது என்று தாய்பாசத்தோடு கூறுகிற காட்சிகள் எல்லாம் வெளியூர்களில் இருப்பவர்களை அப்படியே நெகிழ வைத்துவிட்டதுபோல..

ட்விட்டரில் இணை சீரியல்..

ட்விட்டரில் இணை சீரியல்..

பொதுவாக ராதிகாவின் ட்விட்டர் பக்கத்தில் ஒவ்வொரு எபிசோடு ஒளிபரப்பாகும் போதும் லைவ்வாக கமெண்ட்டுகள் போடப்பட்டே வரும்.. நேற்று பரபரப்பான, நெகிழ்வான காட்சிகள் என்பதால் நிறையவே ட்விட்டுகள் பதிவாக அதென்னமோ சன் டிவிக்கு இணையாக லைவ்வாக ட்விட்டரில் வாணி ராணியை பார்ப்பது போலவே இருந்தது.

பூமிநாதன், ராணி, கௌதம் ஆகியோரின் நடிப்பை பாராட்டி தள்ளியவர்கள் அதிகம். அதுவும் ராதிகாவின் ரசம் ,தயிர் சாதம் வசனத்துக்கும் ஏகப் பாராட்டு!

இனி வரும் திருப்பங்கள்

இனி வரும் திருப்பங்கள்

வாணி ராணி தொடரில் சரவணனை பூமிநாதன் பலி கொடுத்தானா? இனி கறுப்பு மகளின் காதலை கௌதம் ஏற்பானா? கார்த்திக் உடன் பூங்கொடி இணைந்த வாழ்வாழா? விஷேசத்திற்கு அழைக்கத் சென்ற ராணியை அவமானப்படுத்திய ஜோதியின் நிலை என்ன? போன்ற பல திருப்பங்கள் ஒளிபரப்பாக உள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பாசக்கார சகோதரிகள்

பாசக்கார சகோதரிகள்

வாணி ராணி தொடரில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ராதிகா, ராணி கதாபாத்திரத்தில்தான் ரசிகர்களை கவர்கிறார். சாமிநாதனாக பிரிதிவிராஜ், பூமிநாதனாக வேணு அரவிந்த் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X