சன் டிவியில் சாம்பியன்! நடுவர்களாக பாக்கியராஜ், ரேவதி!!
சன் டிவியில் புத்தம் புதியதாக ஒளிபரப்பாக உள்ள சாம்பியன் நிகழ்ச்சியில் சினிமா இயக்குநர் பாக்கியராஜ், நடிகை ரேவதி, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.
சினிமா பிரபலங்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு நடுவர்களாக வருவது ஒன்றும் புதிய விசயமில்லை. மாற்றுத்திறனாளிகளுக்காக முதன் முறையாக ரியாலிட்டி ஷோவை சன் டிவி தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர் பாக்கியராஜ், ரேவதி நடுவர்களாக வந்து கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகள்
தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளின் திறமையை கண்டறிந்து வெளிக் கொண்டுவருதான் சாம்பியன் நிகழ்சியின் முக்கிய அம்சம். இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்று முன்னோட்டத்தில் கூறுகின்றனர்.

சின்னத்திரையில் பாக்யராஜ்
திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வந்த பாக்யராஜ், கடந்த சில ஆண்டுகளாக அப்பா, அண்ணன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சீரியலும் இயக்கினார். தற்போது முதன்முறையாக சன்டிவியில் நடுவராக பங்கேற்றுள்ளார்.

நடிகை ரேவதி
சினிமாவில் நீண்ட காலம் நடிக்காமல் பிரேக் விட்டிருந்த நடிகை ரேவதி, சாம்பியன் நிகழ்ச்சிக்கு நடுவராக வந்து நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்துகிறார்.

பட்டிமன்ற ராஜா
சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றத்தில் பேசி பிரபலமடைந்த ராஜா, தற்போது சினிமாவில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரும் சாம்பியன் நிகழ்ச்சிக்கு நடுவராக வந்துள்ளார்.

ஞாயிறுதோறும்
சாம்பியன் நிகழ்ச்சி வரும் ஞாயிறுக்கிழமை முதல் வாரந்தோறும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











