Sundari 2: சுந்தரிக்கு ஜோடியாகும் நடிகை சாயா சிங் கணவர்.. அந்த ஒரு "டுவிஸ்ட்” வேற இருக்காமே..!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இன்னும் ஒரு சில எபிசோடுகளில் முடிவுக்கு வரும் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதைத்தொடர்ந்து நடிகை கேப்ரல்லா செல்லஸ் நடிப்பில் சுந்தரி சீசன் 2 தொடங்கப்பட இருக்கிறது என்ற தகவல்களும் பரவி வருகிறது.
சுந்தரி 2 சீரியலின் கதாநாயகனாக தெய்வமகள் சீரியல் பிரகாஷ் தான் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சுந்தரி சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை இயக்குனர் அழகர் இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட இந்த சீரியல் 800 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.
அதுபோலத்தான் சுந்தரி சீரியலில் கதைக்களமும் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. சுந்தரியின் கணவர் அவருடைய காதலியை சுந்தரிக்கு தெரியாமல் திருமணம் செய்து அவருக்கு இப்போது பெண் குழந்தையும் பிறந்து இருக்கிறது. சுந்தரி கிராமத்தில் இருக்கும் போது பல அவமானங்களை தாண்டி தான் ஒரு கலெக்டராக வேண்டும் என்று போராடிக் கொண்டிருப்பார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய நிறத்தை காட்டி அவமானங்களை படும்போது ஆரம்பத்தில் சுந்தரிக்கு உதவியாக இருந்தது அனுதான். ஒரு கட்டத்தில் சுந்தரியின் கணவர் கார்த்திக் சுந்தரியை அனுவிடமிருந்து பிரித்து பல பிரச்சனைகள் நடந்து வந்தது. அதையெல்லாம் தாண்டி இப்போது அனுவிற்கு சுந்தரி பற்றிய உண்மைகள் தெரிய வந்திருக்கிறது.
ஆரம்பத்தில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த இந்த கதை நாட்கள் செல்ல செல்ல சுந்தரி தன்னுடைய கனவை ஜெய்ப்பதற்காக போராடாமல் அனுவின் உயிரை காப்பாற்றுவதற்காக தன்னுடைய கணவர் பற்றிய ரகசியங்களை மறைத்த விதமும், அதுபோல இரண்டு வருடங்களுக்கு மேலாகவே அனு கர்ப்பமாக இருந்தது போன்ற காட்சி அமைப்புகளும் இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் சலிப்பு தட்ட தொடங்கி இருந்தது.
அதன் அடிப்படையிலேயே சில வாரங்கள் டிஆர்பியும் குறைய தொடங்கியது. இதனை புரிந்து கொண்ட சீரியல் டீம் தற்போது அடுத்தடுத்து உண்மைகளை அவிழ்த்து சீரியலை வேகமாக முடிவுக்கு கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியான பிரமோவில் அனுவின் குழந்தையை சுந்தரியிடம் ஒப்படைத்துவிட்டு அனு காணாமல் போய் இருக்கிறார். தான் பேசிய வீடியோ ஒன்றை சுந்தரிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இப்படியாக இருக்கும் நிலையில் இந்த சுந்தரி சீரியல் முடிவடைந்ததும் இது இரண்டாவது சீசன் தொடங்கப்படுகிறது என்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதிலும் கதாநாயகனாக சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் பிரகாஷ் கேரக்டரில் நடித்த கிருஷ்ணா தான் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நடிகர் கிருஷ்ணா நடிகை சாயா சிங்கின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல நடிகர் கிருஷ்ணாவிற்கு தெய்வமகள் சீரியலுக்கு பிறகு வந்த வாய்ப்புகள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் சுந்தரி 2 சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்தோடு இருந்து இவருடைய நடிப்புக்கும் மீண்டும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











