Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
சுந்தரி, கண்ணம்மாவிற்கு அடிச்சது ஜாக்பாட்...கிடைச்சது புது சான்ஸ்...எதுல தெரியுமா?
சென்னை : சன் டிவி மற்றும் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பவர்கள் வினுஷா தேவி மற்றும் கேப்ரில்லா செலஸ். கேப்ரிலா, சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலிலும், வினுஷா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலிலும் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்த போது இவர்களின் தோல் நிறத்தின் காரணமாக வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டது. பிறகு அதே காரணத்தால் கேப்ரிலாவிற்கு சுந்தரி சீரியலிலும், வினுஷாவிற்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தற்போது இவர்கள் இருவருக்கும் எண்4 என்ற படத்தின் முலம் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. டிக்டாக் பிரபலமான அக்ஷயும் இந்த படத்தில் நடக்கிறார்.
நான்
ரொம்ப
மன்னிப்பு
கேட்கிறேன்..
சூர்யா
பற்றி
மேடையில்
அப்படி
பேசிய
சாய்
பல்லவி!
2016 ம் ஆண்டு கலக்க போவது யாரு என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர் கேப்ரிலா. மீண்டும் சுந்தரி சீரியலில் அறிமுகமான பிறகு சோஷியல் மீடியாவிலும் இவருக்கு வரவேற்பு அதிகரித்தது. கருப்பான கிராமத்து பெண், படித்த சிட்டி மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு சந்திக்கும் பிரச்சனைகள், அதிலிருந்து மீண்டும் அவர் சாதித்து வாழ்க்கையில் ஜெயிப்பது தான் சுந்தரி சீரியலின் கதை.
நிஜ வாழ்க்கையிலும் தான் கருப்பாக இருப்பதால் பல வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு, பல போராட்டங்களை சந்தித்தவர் கேப்ரிலா. இதனால் சுந்தரி சீரியல் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு போய் விட்டது.
இதே போல் அனுபவங்களை வினுஷா தேவியும் சந்தித்துள்ளார். கருப்பாக இருப்பதால் வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்ட வினுஷாவிற்கு, கருப்பாக இருப்பதால் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் கண்ணம்மா ரோலில் நடித்து வந்த ரோசினி அதிலிருந்து திடீரென விலகியதால், வினுஷாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
பாரதி கண்ணம்மா சீரியலிலும், கருப்பாக இருப்பதால் தனது சித்தி மற்றும் தங்கையால் ஒதுக்கப்பட்டு, பல பிரச்சனைகளை சந்தித்து, பிறகு திருமண வாழ்க்கையிலும் பல போராட்டங்களை சந்திக்கும் பெண்ணின் கதை தான்.இவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில், ஒரே படத்தில் இணைந்து நடிக்க சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் போஸ்டர்களை அவர்கள் சந்தோஷமாக தங்களின் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.
-
ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..நயன் – விக்கி ஜோடியின் மாஸ்டர் பிளான்.. அப்போ ஹனிமூன் இல்லையா?
-
2021ம் ஆண்டின் சிறந்த படங்கள்.. கர்ணன், டாக்டர், மாஸ்டர்.. சைமாவில் மாஸ் காட்டும் தமிழ் படங்கள்!
-
“அதிதியிடம் தோற்றதில் மகிழ்ச்சி, விட்டுக்கொடுத்து செல்வதுதன் அழகு”: விருமன் சக்சஸ்மீட்டில் கார்த்தி