Gabriella: சுந்தரி சீரியலை முடிக்க காரணம் இதுதானா? கேப்ரில்லா சொன்ன தகவல்!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'சுந்தரி' சீரியல் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாகும். தற்போது இந்த சீரியல் முடிவடைந்துள்ள நிலையில், இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடித்த கேப்ரில்லா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறியுள்ளார்.
நடிகை கேப்ரில்லா செல்லஸ் 2016ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி டிடி போல் நடித்து காட்டி பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்பு டிக் டாக்கில் வீடியோ போட்டு பெயர் எடுத்தார். சின்னத்திரையில் தலைகாட்டி வந்த கேப்ரில்லா, நயன்தாரா நடித்த ஐரா என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின் சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படத்திலும், காஞ்சனா 3 போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.

இதையடுத்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். சுந்தரி சீரியல் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2023ம் ஆண்டு முடிவடைந்தது. இதில், கிராமத்தில் பிறந்து வளரும் சுந்தரி, குடும்பத்தின் அழுத்தம் காரணமாக, ஐஏஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்ற கனவை மறந்து திருமணம் செய்து கொள்கிறாள். ஆனால், கருப்பாக இருப்பதால்,
சுந்தரியை கைவிட்டுவிட்டு அனுவை திருமணம் செய்து கொண்டு சுந்தரியின் வாழ்க்கையை வீணாக்குகிறான் அவள் கணவன். ஒருகட்டத்தில், கணவனின் இரண்டாவது மனைவியின் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு சுந்தரிக்கு வருகிறது. இத்துடன் முதல் பாகம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், சுந்தரி சீரியல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பானது.
சீரியலுக்கு எண்ட் கார்டு: இதில், சுந்தரி தனது கனவை கடுமையான போராட்டதிற்கு பிறகு அடைந்து ஐஏஎஸ் அதிகாரியாகுகிறார். மேலும் இறந்துவிட்டதாக நினைத்த அனு உயிருடன் இருக்கிறார். பின் கார்த்திக் தன் தவறுகளை உணர்ந்து, சுந்தரியிடம் மன்னிப்பு கேட்டு, அனுவுடன் மீண்டும் இணைகிறார். இறுதியாக, சுந்தரியும் வெற்றியும் திருமணம் செய்துகொண்டதாக சுந்தரி சீரியல் முடிக்கப்பட்டுள்ளது. இதன் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு தள போட்டோ இணையத்தில் டிரெண்டானது.

கேப்ரில்லா சொன்ன குட் நியூஸ்: இதையடுத்து, தற்போது, கேப்ரில்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது, தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சுந்தரி சீரியல் ரசிகர்கள் ஓ இதற்காகத்தான் சீரியலை இவ்வளவு அவசர அவசரமாக முடிச்சீங்களா என கேட்டு வருகின்றனர்.கடந்த மாதம், நடிகை கேப்ரியல்லா தன் கணவரை பிரிந்துவிட்டதாக ஒரு தகவல் இணையத்தில் காட்டுத் தீ போல பரவியது. கேப்ரில்லாவின் கணவருக்கு கேப்ரில்லா, சீரியலில் நடிப்பது பிடிக்கவில்லை என்றும், இதுதான் பிரிவுக்கு காரணம் என்றும் வதந்தி பரவி நிலையில் தற்போது இந்த மகிழ்ச்சியான தகவல் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











