ஜாக்கெட் அணியாமல் போஸ் கொடுத்த ’சுந்தரி’ கேபி.. ட்ரோல் செய்த நெட்டிசன்.. என்ன பதிலடி தெரியுமா?

சென்னை: சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் ஜாக்கெட் அணியாமல் போஸ் கொடுத்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களுக்கு வெளியான ட்ரோல் கமெண்ட்டுகளுக்கு பதிலடி கொடுத்து தற்போது பதிவிட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மைம் கலைஞரான கேப்ரியல்லா செல்லஸ் நயன்தாரா நடித்த ஐரா உள்ளிட்ட சில படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

சன் டிவியில் வெளியான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து கலக்கி வரும் அவர், அவ்வப்போது மாடலிங்கில் ஆர்வம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Sundari serial actress Gabriella Sellus slams netizen who trolled her for glamour dress

சுந்தரி சீரியல் நடிகை: சின்னத்திரை, வெள்ளித்திரைகளில் ஹீரோயினாக வெள்ளைத் தோல் நடிகைகளையே அதிகமாக பயன்படுத்தி வரும் நிலையில், அவ்வப்போது கருப்பு கட்டழகிகளும் ரசிகர்களை தங்கள் கவர்ச்சியால் கவர்ந்து இழுப்பது வழக்கம்.

சீரியலில் அப்படியொரு புரட்சியை சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியல் நடத்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதில், லீடு ரோலில் கேப்ரியல்லா செல்லஸ் நடித்து வருகிறார்.

Sundari serial actress Gabriella Sellus slams netizen who trolled her for glamour dress

ஜாக்கெட் அணியாமல் போட்டோஷூட்: கடந்த பிப்ரவரி மாதம் கேப்ரியல்லா செல்லஸ் ஜாக்கெட் அணியாமல் நடத்திய போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ""சுருங்க போகும் தோலிற்கு ஓராயிரம் விமர்சனம் , சுருங்கிய பின்பும் தொடரட்டும் எனது சுதந்திரம்" என பக்காவான கேப்ஷன் ஒன்றையும் கொடுத்து இருந்தார்.

அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் செம போல்ட் அக்கா நீங்க என வர்ணித்து வந்த நிலையில், சில நெட்டிசன்கள் வழக்கம் போல ஏன் இப்படி ஜாக்கெட் அணியாமல் போட்டோ போட்டு இருக்கீங்க, இதெல்லாம் நல்லா இல்லை என ட்ரோல் செய்தனர்.

Sundari serial actress Gabriella Sellus slams netizen who trolled her for glamour dress

தமிழரோட பண்பையும் ஒழுக்கத்தையும் காத்துல பறக்க விடுறா: அந்த பதிவை பார்த்த, நெட்டிசன் ஒருவர் இப்படிலாம் டிரெஸ் பண்ணிட்டு.. ஏதாவது தத்துவ கவிதையை போட்டுட்டு.. தமிழரோட பண்பையும் ஒழுக்கத்தையும் காத்துல பறக்க விட்டுட்டு, தப்ப சரின்னு சொல்ல வேண்டியது" என கடுமையாக விளாசி உள்ளார்.

பதிலடி கொடுத்த கேபி: இந்நிலையில், அந்த நெட்டிசனின் கமெண்ட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் போட்டு தக்க பதிலடி கொடுத்துள்ளார் சீரியல் நடிகை கேபிரியல்லா செல்லஸ். "திறமைக்கும் உடலுக்கும் சுயவிருப்பத்திற்கும் வித்தியாசம் அறியாத வேடிக்கை மனிதர்கள்.. என்றும் இவர்களின் கருத்து எனக்கு வேடிக்கையே.. புள்ளைங்களா புடிச்சத நியாயமான மனசோட செஞ்சு சும்மா கலகலன்னு வாழ்க்கைய வாழுங்க.. எனது கவி பாட எனது நாவு போதுமானது உடல் அல்ல!" என பதிவிட்டுள்ளார் கேப்ரியல்லா செல்லஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X