சன்டேயில் கலகலப்பூட்டும் தேவதர்ஷினி-மதுரை முத்து
டாக்டர், ரியல்எஸ்டேட் அதிபர், திருமணத் தகவல் மையம், களைக்கூத்தாடி என பலவித கெட்டப்புகளைப் போட்டு தேவதர்ஷினி - மதுரை முத்து ஜோடி சண்டே கலாட்டாவை கலகலப்பூட்டுகின்றனர்.
சன் டிவியில் கடந்த ஒருமாதகாலமாக காலை 10.30 மணிக்கு சீரியல் எதுவும் இல்லாமல் இருந்த போது தினசரி ஒளிபரப்பானது சண்டே கலட்டா.
இப்போது அந்த நேரத்தில் செல்லக்கிளி சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டதால் கடந்த 3 நாட்களாக மதுரை முத்து - தேவதர்ஷினி ஜோடியை காணமுடியவில்லை. இனி வழக்கம் போல ஞாயிறு மட்டுமே பார்க்க முடியும். எல்லோரும் ரசிக்கும் இந்த ஜோடியை அவரவர்கள் வீட்டில் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.

100 வது எபிசோடை நோக்கி
சாதாரணமாக தொடங்கிய சண்டே கலாட்டா இப்போது 75 எபிசோடுகளைத் கடந்து ஒளிபரப்பாகிவருகிறது.
முத்துவின் நகைச்சுவை வசனங்களும், தேவதர்ஷினியின் நடிப்பும்தான் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பக்கபலமாக இருப்பதாக கூறுகின்றனர் ரசிகர்கள்.

காமெடி ஜோடி
திரைப்படங்களில் விவேக் உடன் காமெடி செய்த தேவதர்ஷினியை தேடி வந்துள்ளது சண்டே கலாட்டா வாய்ப்பு. சீரியலில் பிரபலமாக இருந்த அவர் சிறிது தயக்கத்திற்குப் பிறகே ஒத்துக் கொண்டாராம். இப்போது முத்து - தேவதர்ஷினி காமெடி ஜோடி பிரபலமாகிவிட்டது.

ரசிக்கும் கணவர்
தேவதர்ஷினியின் காமெடிக்கு அவரது கணவர் சேத்தனும், மகளும்தான் முதல் ரசிகர்களாம். முதல் விமர்ச்சனமும் கணவரிடம் இருந்துதான் வருமாம்.

மனைவிதான் ரசிகை
மதுரை முத்துவின் காமெடிப் பேச்சினைக் கேட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டவராம் அவரது மனைவி. சண்டே கலாட்டாவின் முதல் ரசிகையும் அவர்தான் என்கிறார்.

தெரிந்த காமெடிதான்
நிகழ்ச்சியில் இந்த ஜோடி பேசும் காமெடிகள் பெரும்பாலும் தெரிந்த காமெடிதான் என்றாலும் அதன் பின்னணியில் ஒளிபரப்பாகும் காமெடி கிளிப்பிங்க்ஸ்கள் ரசிகர்களை கவர்கிறதாம்.


Click it and Unblock the Notifications











