நடிப்புக்கு முழுக்கு போட்ட சீரியல் நடிகை.. காரணம் என்ன? குழப்பத்தில் ரசிகர்கள்!

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த சுந்தரி சீரியலில் அனு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ரீ கோபிகாவுக்கும் வருண் தேவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது, அவர் நடிப்பில் இருந்து மொத்தமாக விலகிவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த தகவல் அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சின்னத்திரை சீரியலுக்கு என்றே பல ரசிகர்கள் இருக்கிறார்கள், காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் இல்லத்தரசிகள், இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் பெரிய ரசிகர்களாகி விட்டார்கள். அப்படித்தான் அன்பே வா, சுந்தரி போன்ற சீரியல்களில் நடித்து தனக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் நடிகை ஸ்ரீ கோபிகா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், மலையாளத்தில் பல தொடர்களில் நடித்துள்ளார்.

Sundari serial shree gobika

ஸ்ரீகோபிகா: தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான அன்பே வா தொடரில் நடித்த இவருக்கு பெயர் சொல்லும் தொடராக அமைந்தது சுந்தரி சீரியல் தான். இந்த சீரியலில், அனு என்கிற கதாபாத்திரத்தில் ஒன்றரை வருடத்திற்கும் மேலாக, கர்ப்பமாக நடித்திருந்தார். சுந்தரி சீரியலில் லீட் ரோலில் நடித்த கேப்ரில்லாவிற்கு இணையாக இவருக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. சுந்தரி தொடர் முடிந்த நிலையில், தற்போது இவர் 'மாங்கல்யம் தந்துனானே' என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஆனால், அந்த சீரியலில் இருந்து விலகுவது மட்டுமில்லாமல், மொத்தமாக நடிப்புக்கு முழுக்கு போட இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Sundari serial shree gobika

இனி நடிக்க மாட்டேன்: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீ கோபி, இனி நான் 'மாங்கல்யம் தந்துனானே' சீரியலில் நடிக்க மாட்டேன் என்பதை ஒரு கணம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில், நீங்கள் எனக்கும் என் குழுவினருக்கும் அளித்த அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. நான் சீரியலில் இருந்து விலகுவது மட்டுமல்லாமல், என் நடிப்பு வாழ்க்கையை முற்றிலுமாக விட்டுவிடுகிறேன். இது ஒரு நீண்ட பயணம், நீங்கள் அனைவரும் என்னுடன் ஒவ்வொரு அடியிலும் இருந்து, உங்கள் ஆதரவையும், அன்பையும், ஊக்கத்தையும் அளிப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் என் இதயத்தில் இருந்து நன்றி என பதிவிட்டுள்ளார்.இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Sundari serial shree gobika

விலக காரணம் என்ன: சீரியல் நடிகை ஸ்ரீகோபிகாவிற்கு கடந்த ஆண்டு வருண் தேவ் என்பவருடன் திருமணம் நடந்தது. இருவரும் எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினார்கள். தொடர்ந்து சீரியல்களில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ரீகோபிகா திடீரென நடிப்பை விட்டு விலகுவது ஏன் என தெரியவில்லை. ஒருவேளை இவர் கர்ப்பமாக இருக்கிறாரா... இல்லை ஸ்ரீ கோபிகா நடிப்பதால், குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதால், இந்த முடிவை எடுத்தாரா என்பது தெரியவில்லை. இவர் காரணத்தை சொல்லாமல் விலகுகிறேன் என பதிவிட்டுள்ளது. இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X