மீண்டும் முருங்கை மரம் ஏறிய குணசேகரன்.. ஜனனியை கொல்ல போட்ட சதி.. எதிர் நீச்சல் 2 சீரியல் !

சென்னை: காலில் காயமடைந்ததை அடுத்து,மருத்துவமனையில் இருந்து ஜனனி வீட்டுக்கு வர அனைவரும் அவளை பார்த்து நலம் விசாரிக்கின்றனர். அப்போது, அனைவரிடத்திலும் எனக்கு நடந்ததை பார்க்கும்போது இது தானாக நடந்தது போல தெரியவில்லை. என் உயிருக்கு ஏதோ பெரிய ஆபத்து வரப்போகிறது போல எனக்கு தெரிகிறது என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து, என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ஜனனி அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்க, அப்போது வரும் சக்தி மாத்திரையை கையில் கொடுத்து, இதை சாப்பிடு நான் கீழே சென்று பாலை எடுத்து வருகிறேன் என்று சொல்கிறான். அப்போது குந்தவையிடம் இருந்து போன் வருகிறது. அந்த போனை சக்தி எடுக்காமல் கட் செய்கிறான். மீண்டும் குந்தவையிடம் இருந்து போன் வர ஜனனி யார்? என்று கேட்கிறாள் குந்தவை தான் ஃபோன் செய்கிறாள். முக்கியமான விஷயம் எதுவும் இருக்காது நான் காலையில் பேசிக்கொள்கிறேன் என்கிறான்.

எதிர்நீச்சல்: அப்போது, ஜனனிக்கு அருகே வரும் சக்தி நேத்து ஹாஸ்பிடல்ல கால் வலிக்குது தூக்கிட்டு போனு சொன்னியே வேணும்னு தானே அப்படி பண்ணே என்று கேட்கிறான். அதெல்லாம் ஒன்னும் இல்ல உண்மையிலேயே எனக்கு கால் வலி. அதனாலதான் நான் உன்னை தூக்கிட்டு போக சொன்னேன். குந்தவை வந்ததால், அப்படி சொல்லவில்லை என்று ஜனனி சொல்ல, அப்போது சக்தி, குந்தவை வந்ததுனாலத்தான் பொஸசிவ் ஆகி. தூக்கிட்டு போக சொன்னேனு நினைச்சேன் என்று சொல்ல, அதுவும் ஒரு காரணம் தான் என்று ஜனனி சொல்ல இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

ஜனனியை கொல்ல சதி: இதையடுத்து சக்திக்கு ஏதோ ஒரு வேலையை கொடுத்து அவனை வெளியில் அனுப்பி விடுகிறான் குணசேகரன். இதுதான் ஜனனியை கொல்வதற்கு சரியான நேரம் என்று பிளான் போட்ட ஆதி குணசேகரன், ஜனனி அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது, வாட்டர் ஹீட்டர் வெடித்து அதிலிருந்து புகை வெளியேறுகிறது. இதனால், அறை முழுவதும் புகை சூழ்ந்துவிட, பயந்து போன ஜனனி, கதவை திறந்து வெளியே வரலாம் என்று நடக்க முடியாமல் நடந்து கதவின் அருகே வந்து கதவை திறக்க கதவு வெளியில் பூட்டப்பட்டுள்ளது. பயந்து போன ஜனனி கதவை தட்டி யாராவது இருக்கீங்களா... என்னை காப்பாத்துங்கள் என்று கத்துகிறாள். யாரும் வராததால், மெத்தை மீது இருக்கும் ஃபோனை எடுக்க முயற்சி செய்ய நடக்க முடியாமல் விழுந்து விடுகிறாள்.

பின் தட்டுத்தடுமாறி ஃபோனை எடுத்து சக்திக்கு ஃபோன் போட்டு பேசுவதற்குள். அறை முழுவதும் புகை சூழ்ந்துவிட மூச்சு திணறல் வர, அப்படியே, மயங்கி கீழே விழுந்து விடுகிறாள். மறுபக்கம் ஜனனியின் ஃபோனை எடுத்த சக்தி, ஜனனி என்ன என்று கேட்கிறான். ஆனால், ஜனனியிடம் இருந்து பதில் ஏதும் வராததால், ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்ட சக்தி. காரை எடுத்துக்கொண்டு வேகமாக வீட்டுக்கு வந்து ஜனனி இருக்கும் அறையின் கதவு பூட்டப்பட்டிருப்பதை பார்த்து பதறுகிறான். வீட்டுக்குள் இருந்து புகை வருவதை பார்த்து பதறிப் போய் கதவை திறக்க ஜனனி மயங்கிய நிலையில் இருக்கிறாள். இதையடுத்து, அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றுகிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

குணசேகரன் காரணம்: அனைவரும் பதற்றத்துடன் ஜனனியிடம் என்ன ஆச்சு என்று கேட்க, அப்போது ஜனனி வாட்டர் ஹீட்டர் வெடித்து புகை வந்தது. நான் தப்பித்து வெளியே வர முயற்சி செய்து கதவை திறக்க வந்தேன். ஆனால், கதவை யாரோ வெளியில் இருந்து பூட்டி விட்டார்கள் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படி ஒரு வேலையை செய்தது யார் என்று அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர். அப்போது, ஜனனி நான் ஏற்கனவே என் உயிருக்கு ஏதோ பெரிய பிரச்சனை வருவது போல தோன்றுகிறது என்று சொன்னேன். மேலே இருந்து பூ தோட்டி விழுந்தது. இப்போ இப்படி ஆகி இருக்கிறது. இந்த வேலையை இந்த வீட்டில் ஆதி குணசேகரனைத் தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது அவர் தான் எல்லாத்துக்கும் காரணம், அவர் தான் என்னை கொல்லப்பார்க்கிறார் என்று சொல்கிறாள்.

மீண்டும் சிறையில் குணசேகரன்: இதையடுத்து, ஜனனி குந்தவைக்கு ஃபோன் போட்டு அவரிடம் நடந்த விஷயம் அனைத்தையும் சொல்கிறாள். வீட்டில் அனைவரும் கோவிலுக்கு கிளம்பி கொண்டு இருக்கும் போது வீட்டிற்கு வரும் குந்தவை, வீட்டில் இருக்கும் பெண்களை துன்புறுத்தக்கூடாது என்று சொல்லித்தான் உங்களை பரோலில் விட்டோம். ஆனால், நீங்க மீண்டும் உங்க வேலையை காட்டி இருக்கீங்க, ஜனனி கொடுத்த புகாரின் பேரில் உங்களின் பரோல் ரத்து செய்யப்படுகிறது. இதனால், நான் உங்களை கைது செய்ய வந்து இருக்கிறேன் என்று சொல்ல வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அவரை அனுப்ப முடியாது என்று தகராறு செய்கின்றனர்.

அப்போது விசாலாட்சி, வீட்டில் இருக்கும் மருமகளிடம், ஏன்டி வேண்டுமென்றே இந்த மாதிரி விஷயங்களை செய்கிறீர்கள். நீங்கள் அனைவரும் ஒத்துக்கொண்டுதானே கோவில் கிளம்புறோம், கோயிலுக்கு போகும் நேரத்தில் எதற்கு இப்படி வேண்டுமென்றே வம்பு செய்கிறீர்கள், ஒரு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத்தானே கோவிலுக்கு போகலாம் என்று கேட்க, அப்போது நந்தினி நாங்கள் கோயிலுக்கு வராதது மட்டும்தான் உங்களுக்கு தெரிகிறதா... இங்கு நடந்த பிரச்சனை எல்லாம் உங்களுக்கு கண்ணுக்கு தெரியவில்லையா என்று சொல்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

கைது செய்த போலீஸ்: இதையடுத்து ஆதி குணசேகரனை கைது செய்வதற்காக போலீசார் வீட்டிற்கு வந்து, ஆர்டர் வந்து இருக்கு குணசேகரனை கைது செய்ய வேண்டும் என்று சொல்ல, கதிர் அதெல்லாம் முடியாது, என்று போலீசாரிடம் சண்டை போட, ஆதி குணசேகரின் தம்பிகள் அனைவரும் அவரை விட மாட்டோம், எதுவாக இருந்தாலும் வக்கீல் வரட்டும் என்று சொல்லி தகராறு செய்கின்றனர். தகராறு முற்றி ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறிவிடுகிறது. அப்போது, ஆதி குணசேகரன் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு இப்போ, நான் உங்களுடன் வர வேண்டும் அவ்வளவுதானே நான் வருகிறேன் என்று போலீஸ் ஜீப்பில் ஏறி செல்கிறான்.

அண்ணன் கைது செய்யப்பட்டதால், ஆத்திரத்தில் இருக்கும் கதிர், ஜனனியை பார்த்து எல்லாம் உன்னால் தான், நாடகமா ஆடுற இரு உன்னை வந்து பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, அனைவரும் காரில் ஏறி செல்கின்றனர். அப்போது, அய்யோ, பெரியவனே உனக்கு ஏன்டா இப்படி நடக்குது, உனக்கு ஒரு நல்லதே நடக்காதா, ஏன்டி ஈஸ்வரி இப்படி நம்ப வெச்சி முதுகில் குத்திவிட்ட என்று அழுது புலம்பிகிறாள் விசாலாட்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X