ஜனனி போட்ட பிச்சைடா.. குணசேகரனை அடித்த ஈஸ்வரி.. இனி அடுத்து என்னவாகும்.. எதிர்நீச்சல் 2 சீரியல்!
சென்னை: ஜனனியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு குணசேகரன் வாட்டர் ஹீட்டரை வெடிக்க வைத்து அதில் அவளை சிக்க வைக்கிறான். சரியான நேரத்திற்கு சக்தி வீட்டிற்கு வர, ஜனனி காப்பாற்றப்படுகிறாள். இந்த விஷயத்தை ஜனனி குந்தவைக்கு ஃபோன் போட்டு வாட்டர் ஹீட்டர் வெடித்து அறை முழுவதும் புகை சூழ்ந்து கொண்டது என்றும், நான் தப்பித்து வெளியே வர முயற்சி செய்தேன். ஆனால், கதவை யாரோ வெளியில் இருந்து பூட்டி விட்டார்கள். மேலும், மாடியில் இருந்து பூ தோட்டி விழுந்தது. இப்போ இப்படி ஆகி இருக்கிறது. இந்த வேலையை இந்த வீட்டில் ஆதி குணசேகரனைத் தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது என்கிறாள்.
இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வரும் குந்தவை, பெண்களை துன்புறுத்தக்கூடாது என்று சொல்லித்தான் உங்களை பரோலில் விட்டோம். ஆனால், நீங்க மீண்டும் உங்க வேலையை காட்டி இருக்கீங்க, ஜனனி கொடுத்த புகாரின் பேரில் உங்களின் பரோல் ரத்து செய்யப்படுகிறது. இதனால், நான் உங்களை கைது செய்ய வந்து இருக்கிறேன் என்று சொல்ல வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அவரை அனுப்ப முடியாது என்று தகராறு செய்கின்றனர். இதையடுத்து, ஆதி குணசேகரனை கைது செய்வதற்காக போலீசார் வீட்டிற்கு வந்து, ஆர்டர் வந்து இருக்கு குணசேகரனை கைது செய்ய வேண்டும் என்று சொல்ல, கதிர் அதெல்லாம் முடியாது, என்று போலீசாரிடம் சண்டை போட, ஆதி குணசேகரின் தம்பிகள் அனைவரும் அவரை விட மாட்டோம், எதுவாக இருந்தாலும் வக்கீல் வரட்டும் என்று சொல்லி தகராறு செய்கின்றனர். தகராறு முற்றி ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறிவிடுகிறது. அப்போது, ஆதி குணசேகரன் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு இப்போ, நான் உங்களுடன் வர வேண்டும் அவ்வளவுதானே நான் வருகிறேன் என்று போலீஸ் ஜீப்பில் ஏறி செல்கிறான்.

உயிருக்கு ஆபத்தா: இதையடுத்து குணசேகரன் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது நீதிபதி, ஈஸ்வரியிடம் நீங்கள் தான் குணசேகரன் மீது கேஸ் கொடுத்தது. அப்படி இருக்கும்போது அவர் பரோலில் வர எப்படி ஒத்துக் கொண்டீர்கள் என்று கேட்கிறார். உடனே ஈஸ்வரி, குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்தது அவர் வெளியில் வந்தால் தான் அந்த பிரச்சனை சரியாகும் என்பதால், அவர் பரோலில் வருவதற்கு நாங்கள் ஒத்துக் கொண்டோம் என்கிறாள். அதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி, இவர் பரோலில் இருந்து வெளியே வந்ததால் உங்கள் நான்கு பேரின் உயிருக்கு ஆபத்து என்று போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள், அது உண்மையா என்றும், ஜனனி உங்களுக்கு இரண்டு மூன்று தடவை விபத்து நடந்ததாகவும் அதற்கு காரணம் குணசேகரன் தான் என்றும் போலீசார் சந்தேகப்படுகின்றனர், அது உண்மையா, உங்களுக்கு அப்படி எதுவும் சந்தேகம் இருக்கா... இவரால் உங்கள் உயிருக்கு ஆபத்துனு நினைக்கிறீங்களா? உங்களுக்கு இவர் மேல சின்ன சந்தேகம் இருந்தாலும் பயப்படாமல் சொல்லுங்கள் நான், இவரின் பரோலை ரத்து செய்துவிடுகிறேன் என்று கேட்கிறார்.

இது எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்த ஜனனி குணசேகரன் செய்த அனைத்து விஷயத்தையும் நினைத்துப் பார்க்கிறாள், அப்போது நீதிபதி பயப்படாமல் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள், இவர் எதுவும் சொல்லக்கூடாது என்று பயமுறுத்தி இருக்கிறாரா? என்று கேட்க அப்போது பேசிய ஜனனி எங்களை யாரும் மிரட்டவில்லை, அப்படி மிரட்டுவதற்கு நாங்கள் பயப்படவும் மாட்டோம் என்கிறாள். இதைத்தொடர்ந்து, ஜனனி எனக்கு நடந்த விபத்திற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்ல, ஆதி குணசேகரன் வெளியே வருகிறார். உடனே ஈஸ்வரி ஏன் நீதிபதியிடம் அப்படி சொன்ன என்று கேட்க, ஜனனி இனிமேல் ஏதாவது செய்தால் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்.

குண சேகரனுக்கு நேரம் சரியில்ல: இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், கதிர், நாங்க சொன்னதை செய்ய வேண்டும் என்ற சொல்ல, அதெல்லாம் முடியாது என்ற ஜனனி சொல்கிறாள். இதைக்கேட்டு கடுப்பான கதிர், என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியாதா என்று ஜனனியை அடிக்க பாய்கிறார். அவரை சக்தி தடுக்கிறான். பின் குணசேகரனுக்கு தொடர்ந்து பிரச்சனை வந்து கொண்டே இருப்பதால் விசாலாட்சி ஜோசியர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்து, குணசேகரனின் ஜதகத்தை கொடுத்து, இப்போது நேரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிறார். ஜாதகத்தைப் பார்த்த ஜோசியர், இவருடைய நேரம் இப்போது எதிர்மறையாக இருக்கிறது, இவர் போடும் கணக்கு எல்லாமே இப்போது செல்லுபடி ஆகாது. இதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். இதைக் கேட்டு விசாலாட்சி மற்றும் குடும்பத்தினர் வருத்தம் அடைகின்றனர்.
தீராத பகை: குணசேகரன் சாப்பிட உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு, அவரிடம் பேச வருகிறாள் ஜனனி. உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை. ஆனால் நீங்கள் எங்களை பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறாள். ஜனனி பேசுவதையே கேட்டு விட்டு கோபமாக எழுந்து செல்லும் ஆதி குணசேகரன், அவள் கையில் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக்கை தட்டிவிட்டு அவளை கீழே விழவைக்கிறான். இதனால், ஜனனி தட்டுத்தடுமாறி அப்படியே கீழே விழுகிறாள்.

எல்லாத்துக்கும் காரணம் ஜனனி தான்: குணசேகரன் தன்னுடைய மகன் தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறான். ஆனால், வீட்டில் இருக்கும் அனைவருமே இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கோபமடைந்த குணசேகரன் இது எல்லாத்துக்குமே காரணமே ஜனனி தான். ஈஸ்வரிக்கு அவ்வளவு பெரியதாக யோசிக்க தெரியாது, அதேபோல, தம்பி பொண்டாட்டியான ரேணுகா, நந்தினி இருவருக்கும் அவ்வளவு அறிவு இல்லை. ஆனால், ஜனனி தான் படித்தவள், அவள் இந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் அனைவரும் வீட்டை விட்டு வெளியே சென்று வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள். இதனால், இது அனைத்திற்கும் காரணம் ஜனனி தான். அவள் தான் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஐடியா கொடுக்கிறாள், அந்த தலையை நசிக்கிவிட்டால், வீட்டில் இருக்கும் மற்றவர்களை அமைதியாகி விடுவார்கள் என திட்டம் போடும் குணசேகரன், ஜனனியை தீர்த்து கட்டி விட்டால், வீட்டில் இருக்கும் பெண்கள் பழையபடி நமக்கு அடிமையாக இருப்பார்கள் என்று நினைக்கிறான் ஆதி குணசேகரன். அது மட்டுமல்லாமல் ஜனனியை தீர்த்து கட்டி விட்டு குந்தவையை சக்திக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்கும் ஐடியாவும் குணசேகருக்கு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











