காதல் என்பது என்ன தெரியுமா? காதலர்களுக்கு சன்னிலியோன் கொடுத்த அட்வைஸ்!
சென்னை: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகக் கலக்கி வருபவர் சன்னிலியோன். கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார். தற்போது சன்னிலியோன் எம் டிவி ஸ்ப்ளிட்ஸ் வில்லா எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் சீசன் 15 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் இவர் காதல் குறித்து தனது புரிதலை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்தி தொலைக்காட்சி உலகில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கிறது ஸ்ப்ளிட்ஸ் வில்லா. 21 இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை கொண்டு தங்களது துணையை கண்டுபிடிக்கும் இந்த நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் மாலை 7 மணிக்கு ஜியோ சினிமா மற்றும் எம் டிவியில் இந்த நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.

சன்னி லியோன்: ஸ்ப்ளிட்ஸ் வில்லா சீசன் 15 முதல் பாதி முடிந்த நிலையில், காதல் குகைக்குள் ஹர்ஷ் மட்டும் அனுப்பப்பட்டு இருந்தார். இதில், வைல்டு கார்டு என்ட்ரியாக அவரது முன்னாள் காதலி வந்த போது, சுபியை பார்த்ததும் கட்டிப் பிடித்து உணர்ச்சி வசப்பட்டார் ஹர்ஷ். இவர் தற்போது ருஷாலியை காதலித்து வருவதாக சுபியிடம் கூறி அவரை தவிர்த்தார். ஆனால், நிகழ்ச்சியாளர்கள் ஹர்ஷ் சுபியை கட்டிப் பிடித்த காட்சியை ருஷாலிக்கு போட்டு காட்ட அவர் ஓவர் டென்ஷனாகி, எப்படி எனக்கு துரோகம் செய்ய உனக்கு மனம் வந்தது என திட்ட ஆரம்பித்தார்.
காதல் என்பது என்ன தெரியுமா?: இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த சன்னி லியோன், காதல் என்பது 50 - 50 ஆக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது காதல் இல்லை. நானும் என் கணவரும் அப்படித்தான் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். காதல் என்பதே புரிதல் என ருஷாலிக்கு அட்வைஸ் கொடுத்தார். இதைக்கேட்டு இருவரும் அமைதியானார்கள். இதையடுத்து இந்த வாரத்தின் சிறந்த ஜோடியாக நயேரா மற்றும் திக் விஜய் தேர்வானார்கள். ரூரு மற்றும் அமேஹா ஜோடி இந்த வாரம் எலிமினேட் ஆனார்கள்.
சினிமாவில் அறிமுகம்: ஹாலிவுட்டில் வெளியான ஃபார்ன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோன் இப்பொழுது இந்திய திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இந்தியில் ஏகப்பட்ட படவாய்ப்புகளை குவித்து வருகிறார். 2012 ஆம் ஆண்டு வெளியான ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் தடத்தைப் பதித்தார். இதையடுத்து, ராகினி எம்எம்எஸ் 2 படத்தில் வியக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.
ஓ மை கோஸ்ட்: நடிகை சன்னி லியோன் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி திரைப்படத்தில் லோ ஆன லைஃபு என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த முகமானார். இதையடுத்து சன்னி லியோன் யுவன் இயக்கத்தில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார். இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்கில் வெளியானது. இதில், சன்னி லியோன், ஜி பி முத்து, சதீஷ், தர்ஷா குப்தா ஆகியோர் நடித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











