உதிரிப்பூக்களில் திருப்பம்: சக்தியின் திருமணத்தில் சிக்கல் வருமா?

சக்தியின் வளர்ப்பு அப்பா சிவநேசன் ஏற்பாடு செய்த திருமணம் சொந்தக்காரர்களின் சதியினால் நின்றுவிடுகிறது. சொந்த அப்பாவிடம் சென்றபின்னர் மீண்டும் அதே மாப்பிள்ளையுடன் ஷக்தி திருமணம் நடக்க ஏற்பாடாகிறது. சொந்த அப்பா தட்சிணாமூர்த்தி திருமணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டே மறைமுகமாக அந்த திருமணத்தை மணமேடையில் தடுத்து நிறுத்தவும் ஏற்பாடு செய்கிறார். தனது மகளை அக்காள் மகன் இளங்கோவிற்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்து சதி செய்கிறார் தட்சிணாமூர்த்தி.
அவரது சாகச நாடகம் அரங்கேறும் தினம் வருகிறது. மணமேடையில் ஷக்தி விரும்பிய மணமகனுடன் திருமணம் நடந்ததா? அல்லது அவளது சொந்த அப்பா தட்சிணாமூர்த்தியின் திட்டப்படி இளங்கோ அவளுக்கு மாலையிட்டானா? பரபரப்பான திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.
ஷக்தியாக மானசா நடிக்கிறார். வளர்ப்பு அப்பா சிவநேசனாக சேத்தனும் , சொந்த அப்பாவாக எல். ராஜாவும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி, ஸ்ரீலேகா, ரூபஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள். ஹோம் மீடியா மேக்கர்ஸ்' சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இந்த தொடரை விக்ரமாதித்தன் இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











