ஸ்ரீ சங்கரா டிவியில் ‘‘சூப்பர் கிட்ஸ்’’
சங்கரா தொலைக்காட்சியில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ''சூப்பர் கிட்ஸ்'' நிகழ்ச்சி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
குழந்தைகளுக்கான நிகழ்ச்சி என்றாலே சிறியவர்களை மட்டுமல்ல வீட்டில் உள்ள பெரியவர்களையும் அதிகம் கவரும்.
இதனால்தான் பல தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்படுகின்றன. தற்போது சங்கரா டிவியிலும் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் சூப்பர் கிட்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது.

சிறப்புத் திறமைகள்
சூப்பர் கிட்ஸ் நிகழ்ச்சியில் 4 வயது முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி. குழந்தைகளின் விசேஷ திறமைகளை வெளிப்படுத்தவும் களம் அமைத்துக் கொடுக்கிறது.

இதிகாசக் கதைகள்
நிகழ்ச்சியில் மகாபாரதம், ராமாயணம் போன்ற கதைகளும் சொல்லப்படுவது உண்டு.

விளையாட்டுக்கள்
பணத்தை தேடுவது, பலூன் வெடிப்பது போன்ற பல சுவாரசியமான விளையாட்டு சுற்றுகளும் உண்டு.

உங்க வீட்டு செல்லங்கள்
ஸ்ரீ சங்கரா டிவியில் ஒவ்வொரு ஞாயிறு தோறும் இரவு 6.30 மணிக்கு சூப்பர் கிட்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. உங்க வீட்டுச் செல்லங்கள் பங்கேற்ற 9900053680 எண்ணிற்கு அழைத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications











