நந்திதா நடனம், சிவமணி டிரம்ஸ், ஜெயம்ரவி தீர்ப்பு… சன் சூப்பர் குடுப்பம் கலக்கல்
சன் டிவியின் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இறுதிச் சுற்றில் மருதாணி, பொம்மலாட்டம் குடும்பங்கள் மோதுகின்றன.

நந்திதா நடனம்
இறுதிப் போட்டியில் சிறப்பு நடனமாடி சன் டிவி ரசிகர்களை மகிழ்வித்தார் நடிகை நந்திதா.

ஜெயம் ரவி தீர்ப்பு
போட்டியில் பங்கேற்ற மருதாணி, பொம்மலாட்டம் குடும்பத்தினரின் நடனத்தைப் பார்த்து சிறப்பு விருந்தினரான ஜெயம்ரவி தீர்ப்பளித்தார்.

சிவமணி கலக்கல்
நிகழ்ச்சியில் மற்றொரு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டிரம்ஸ் சிவமணி டிரம்ஸ் வாசித்து பார்வையாளர்களையும், பங்கேற்பாளர்களையும் அசத்தினார்.

ராஜேந்தர் ராக்ஸ்
சூப்பர் குடும்பம் சீசன் 2வின் நடுவரான டி.ராஜேந்தர்தான் ஒவ்வொருமுறையும், நடனமாடி, வாயினால் இசையமைத்து எல்லோரையும் கவர்வார். இம்முறை சிவமணியோடு இணைந்து கலக்கினார்.

சூப்பர் குடும்பம் சீசன் 3
சன் டிவியின் 18 குடும்பத்தினர் பங்கேற்ற சூப்பர் சீசன் 2 நிறைவு கட்டத்தினை எட்டியதை அடுத்து சீசன் 3க்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கியுள்ளதாக சன் டிவியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நடுவர்கள் யார்?
சீசன் 3யில் நடுவராக யார் யார் பங்கேற்க உள்ளனர் என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. சீசன் 2ல் கலக்கிய டி.ராஜேந்தர் மீண்டும் சீசன் 3யில் நடுவராக வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கோப்பை யாருக்கு?
மருதாணி, பொம்மலாட்டம் குடும்பத்திற்கு இடையே இரண்டு சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ளன. மூன்றாவது சுற்றிலும் ஜெயித்து வெற்றிக் கோப்பையை கைப்பற்றப்போவது யார் என்பது அடுத்தவாரம் சூப்பர் குடும்பத்தில் ஒளிபரப்பாகும்.


Click it and Unblock the Notifications











