Super Singer 10: சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் யாரு தெரியுமா?.. தூள் கிளப்பிய டாப் 5 சிங்கர்ஸ்!

சென்னை: விஜய் டிவியில் 10வது சீசனாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது. கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நேரலையாக நேரு உள்விளையாட்டு அரங்கில் இருந்து விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்களை கடந்து நிகழ்ச்சிக்கு தேர்வாகி பல முறை சிறப்பான பாடல்களை பாடி நடுவர்கள் மற்றும் ரசிகர்களின் பலத்த கைதட்டல் வாங்கிய டாப் 5 பாடகர்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வானார்கள்.

VIjay Tv Tv Title Winner Music

அதில், தற்போது வெற்றி மகுடத்தை ஜான் பெற்றுள்ளது ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. டைட்டில் வின்னரை தொடர்ந்து ரன்னர் அப் உள்ளிட்ட மற்ற சுவாரஸ்ய தகவலை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

டைட்டில் வின்னர் ஜான்: விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் பிரம்மாண்டமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெற்று ஏகப்பட்ட பாடகர்கள் பின்னணி பாடகர்களாக சினிமாவில் நுழைந்து சாதனைகளை படைத்து வருகின்றனர். பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில், இந்த 10வது சீசனில் டைட்டிலை ஜான் ஜெரோம் தட்டித் தூக்கியுள்ளார். கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் "நான் ஆட்டோக்காரன்" பாடலை பாடி ஒட்டுமொத்த அரங்கத்தையே ஆட்டம் போட வைத்தார்.

ரன்னர் அப் யாரு?: இறுதியில் இருந்த டாப் 5 போட்டியாளர்களில் இரண்டாவது ரன்னர் அப்பாக வைஷ்ணவி தேர்வானார். ரன்னர் அப் டைட்டிலை ஜீவிதா வென்று அசத்தினார். இரண்டாவது ரன்னர் அப்புக்கு பரிசாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ரன்னர் அப் டைட்டிலை வென்ற ஜீவிதாவுக்கு 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

டைட்டில் வின்னருக்கு என்ன பரிசு?: சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் டைட்டிலை வென்று மகுடம் சூடியுள்ள பாடகர் ஜான் ஜெரோமுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு அட்டகாசமான வீடு வழங்கப்பட்டுள்ளது. 4வது மற்றும் 5வது இடத்தை பிடித்த போட்டியாளர்களான ஸ்ரீனிதி மற்றும் விக்னேஷுக்கு தலா 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் இந்த ஆண்டு வழங்கப்பட்டு இருப்பது ரசிகர்களையும் போட்டியாளர்களையும் சந்தோஷ வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X