கணவருக்கு நல்ல மனைவியா இருக்கப் போறேன் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா
டிவி நிகழ்ச்சி தொகுப்புக்கு கொஞ்சகாலம் பிரேக் விட்டிருக்கிறேன். கணவருக்கு நல்ல மனைவியாக இருக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பாவனா மும்பையின் மேற்கு அந்தேரி பகுதியில் கணவருடன் செட்டிலாகிவிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட சிங்கப்பூர் என்ஜினீயர் நிகில் ரமேசுக்கு மும்பைக்கு டிரான்ஸ்பர் கிடைத்திருப்பதால் இப்போது பாவனாவும் மும்பையில் செட்டிலாகிவிட்டார்.

சிங்கப்பூர் டூ சென்னை
சூப்பர் சிங்கரில் பாவனாவின் ஸ்டைலான பேச்சும் குரல் வளமும் பெரும்பான்மையான ரசிகர்களை பெற்றுக்கொடுத்துள்ளது. இதனை விட்டு விடக்கூடாது என்பதற்காகவே இவர் சென்னைக்கும் சிங்கப்பூருக்கும் பறந்து பறந்து நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார்.

ஆஷா போன்ஸ்லே பாரட்டு
சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஆஷாபோன்ஸ்லே பாவனாவின் ஸ்டைலான பேச்சை பாராட்டியதை தனது பாக்யமாக கருதுகிறார்.

மறக்க முடியாத தருணம்
அது வாழ்வில் மறக்கமுடியாத தருணம் என்று கூறும் பாவனா, கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் இசை பயணத்தை தொடரும் இசை சரஸ்வதியில் வாழ்த்து கிடைத்தது அவ்வளவு சுலபமானதில்லை. அதிலிருந்து மீளவே முடியவில்லை என்று கூறியுள்ளார்.

சிறந்த தொகுப்பாளினி விருது
குளோபஸ் வழங்கிய இந்த ஆண்டிற்கான சிறந்த தொகுப்பாளினி விருது பாவனாவிற்கு கிடைத்துள்ளது. இயக்குநர் ரவிக்குமார் கையினால் அந்த விருதினைப் பெற்றார் பாவனா.

சினிமா டப்பிங் பேச
இஞ்சினியரிங் படித்திருக்கும் பாவனா மீடியா ஆசை காரணமாகவே ரேடியோ ஜாக்கியாக களம் இறங்கி பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக மாறினாராம். அம்மணிக்கு சினிமாவில் டப்பிங் பேச வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாம்.

கணவரின் சப்போர்ட்
பாவனா வீட்டுக்கு பக்கத்தில் உள்ள தெருவில்தான் கணவர் நிகிலோட வீடு, கல்லூரியில பாவனாவின் சீனியர். அப்போ நிகில் பழக்கமில்லையாம். பெற்றோர் பார்த்து வைத்த திருமணம். கல்யாணமாகி தேனிலவுக்கு புக்கட் தீவுக்கு போனபோதுதான் சூப்பர் சிங்கர் வாய்ப்பு கிடைத்ததாம்.

மும்பையில் செட்டில்
நல்ல வாய்ப்பை மிஸ் பண்ண வேண்டாம் என்று கணவர் நிகில்தான் அனுப்பி வச்சார். அப்புறம் அவர் சிங்கப்பூர் நான் சென்னைன்னு லைஃப் போச்சு. இப்போ கணவருக்கு மும்பைக்கு டிரான்ஸ்பர் கிடைச்சிருச்சு. சூப்பர் சிங்கர் சீசன் 4ம் முடிஞ்சிருச்சு. அதான் கணவரோடு மும்பையில செட்டிலாகிவிட்டேன் என்கிறார் பாவனா.

நல்ல மனைவியா இருப்பேன்
இனி அவருக்கு நல்ல மனைவியா இருக்கப்போறேன். அடுத்த டி.வி நிகழ்ச்சி பண்றது பற்றி இப்போ எதுவுமே யோசிக்கல. பார்க்கலாம் என்கிறார் பாவனா.


Click it and Unblock the Notifications











