Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா?

சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு, கோடானு கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் என்று தமிழர்கள் பார்த்து ரசித்து வந்த நிகழ்ச்சி இது.

இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள், எப்போது கிராண்ட் ஃபினாலே நடக்கும் என்று எப்போதுமே ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கள் மக்கள் மத்தியில் இருக்கும். அந்த அளவுக்கு விஜய் டிவியின் மணி மகுடமாக இருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

ஆனால் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பிரியங்கா அடிக்கும் லூட்டிகள் சத்தியமா எரிச்சலைத் தூண்டுகிறது. இவர் கையிலிந்த நிகழ்ச்சியை எப்போது கொடுத்தார்களோ அன்றிலிருந்து இதை கெடுக்க ஆரம்பித்து இருக்கார்.

ராஜலட்சுமி செந்தில்

ராஜலட்சுமி செந்தில்

விஜய் டிவியில் கடந்த இரு முறைக்கு முன் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பரிசை அள்ளியவர்கள், நாட்டுப்புற பாடல்கள் பாடும் தம்பதியான செந்தில், ராஜலட்சுமி. எப்போதுமே விஜய் டிவியின் பழக்கம் வந்து ஒரு முறை ஒரு போட்டியில் கலந்து கொண்டவர்களை அப்படியே அவர்கள் போக்கில் விட்டுவிட மாட்டார்கள். தங்களுக்கு தங்களுக்கு என்று மறுபடி மறுபடி சொந்தம் கொண்டாடி அழைத்துக் கொள்வார்கள். அப்படித்தான் இப்போதும், இந்த தம்பதி சூப்பர் சிங்கரில் கலந்துக் கொண்டு வருகிறார்கள்.

பிரியங்கா தொகுப்பாளினி

பிரியங்கா தொகுப்பாளினி

இந்த சீசனில் மூக்குத்தி முருகன் என்று ஒரு போட்டியாளர். இவர் பிரியங்கா மீது "ஆசை" வைத்து இருக்கிறாராம், பிரியங்கா செந்தில் மீது "ஆசை" வைத்து இருக்காராம். தன் புருஷன் செந்தில் பிரியங்காவை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வது ராஜலட்சுமியின் வேலையாம்.. இந்த கான்செப்டை வச்சு, இவங்க பண்ற கேலிக் கூத்து நிஜமா கலாச்சார சீரழிவு கேடா இல்லையா என்று இதுவரை யாரும் இவர்களை கண்டிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.

சிரிப்பா சிரிப்பு

சிரிப்பா சிரிப்பு

இப்படி முக்கோண காதலில், கல்யாணமானவர்கள் சிக்கிக்கொள்ள, இதை நடுவர்கள் பார்த்து, ரசித்து சிரிக்கிறார்கள். வெளியில் இந்த விஷயம் சிரிப்பா சிரிப்பதை இவர்கள் அறியவில்லையா? காசு கொடுத்தால் எந்த கூத்து நடந்தாலும், நடுவர் கண்ணோட்டத்துடனே பார்த்து ரசிப்பீர்களா? எப்படிப்பட்ட நிகழ்ச்சி அது! அந்த நிகழ்ச்சியில் பாடும் போட்டியாளர்கள் பாடும் இந்த பாடலை சற்றே கேட்டு ரசிக்கலாம் என்றால், இப்படி கேலிக்கூத்து நடத்தி நிகழ்ச்சியின் தரத்தையும், அவர்கள் உழைப்பையும் இப்படி வல்கர் காமெடி ஆக்கி இருக்கிறீர்களே...

போட்டியில் சீரியஸ்

போட்டியில் சீரியஸ்

இப்படி இவர்கள் அடிக்கும் கேலிக் கூத்தால் போட்டியில் சற்றும் சுவாரஸ்யமோ , சீரியஸோ இல்லை. ஏதோ வானொலியில், டிவியில் பாட்டு கேட்பது போல சர்வ சாதாரணமாக இருக்கிறது. போகப்போக நிகழ்ச்சி களை இழந்து, கொஞ்ச மாதங்கள் நிறுத்தி வைத்து ,மீண்டும் ஆரம்பிக்கும்படி நேர்ந்து விடுவதற்குள், சம்பந்தப்பட்டவர்கள் விழித்துக்கொண்டால் நல்லது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X