சூப்பர் சிங்கர் சரணை பார்த்து On The Spot-இல் கங்கை அமரன் பாடிய வாரிகள்.. இளையராஜாவை ஓரம்கட்டிடுச்சே

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 11 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுவும் நடுவராக இந்த சீசனில் இணைந்துள்ள இயக்குநர் மிஷ்கின் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதேபோல் போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் தங்களுக்கு என்று தனி இடத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு உள்ளனர். இப்படி இருக்கையில் நேற்றைய எபிசோடில் சூப்பர் சிங்கர் சரண் பாடி முடித்த பின்னர், அவரைப் பாராட்ட மிஷ்கின் மற்றும் கங்கை அமரன் என இருவரும் மேடைக்கு வந்தார்கள். அப்போது சரணை வாழ்த்தி ஒரு சரணம் பாடினார். அதுவும் பாட பாட வார்த்தைகளைக் கோர்த்து, கங்கை அமரன் பாடியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வார சுற்றில் சரண், அழகி படத்தில் இடம்பெற்ற பாடலான உன் குத்தமா என் குத்தமா பாடலைப் பாடினார். சரண் வழக்கம் போல் சிறப்பாக பாடியதை அடுத்து, நடுவர்களாக இருந்த மிஷ்கின் மற்றும் கங்கை அமரன் என இருவரும் மேடைக்கு சென்று, சரணைப் பாராட்டினார்கள். அதன் பின்னர் உன் குத்தமா என் குத்தமா பாடலை மூவரும் இணைந்து பாடினார்கள். பாடி முடித்த பின்னர் சரண், கங்கை அமரன் காலில் விழுந்தார். அப்போதும் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்த கங்கை அமரன், ஏற்கனவே உள்ள பாடலில் இருக்கும் வரிகளுக்கு பதிலாக, புதிய சொற்களைப் பயன்படுத்தி பாட பாட உருவாக்கிய வரிகளை பாடலாக பாடினார்.

Super Singer Season 11 Gangai Amaran Sung On The Spot Song For To Wish Saran Which Is Too Good - Video
Photo Credit:

அதாவது சரணுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, " நல்ல எதிர்காலமே எல்லோருக்கும் வாய்க்குமே
இன்றைக்கு இங்கே நீ நாளைக்கு எங்கேயோ..
உயரத்தில் போவாயே உலகை நீ ஆள்வாயே..
நான் சொல்லும் வாக்கு நல்வாக்கு!" என்று பாடினார்.


இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கங்கை அமரன் இவ்வாறு பாடியது நிகழ்ச்சியில் இருந்தவர்களை மட்டும் இல்லாமல், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இயக்குநர் கங்கை அமரன் இசையமைப்பாளர் கங்கை அமரன், பாடகர் கங்கை அமரன், பாடலாசிரியர் கங்கை அமரன் என தமிழ் திரையுலகில் கங்கை அமரன் மிகவும் முக்கியமான முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அனுபவமும் ஆர்வமும் தான் அவரால் தங்கு தடையில்லாமல் இப்படி ஒரு வாழ்த்தை, பாடலாக உருவாக்க முடிந்துள்ளது என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Super Singer Season 11 Gangai Amaran Sung On The Spot Song For To Wish Saran Which Is Too Good - Video
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X