பொங்கலுக்கு தலைவரை பார்க்க ரெடியா? சன் டிவியின் வேற லெவல் அறிவிப்பு
சென்னை : பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் புதிய திரைப்படங்கள் குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகமான மக்கள் திரையரங்களுக்கு சென்று படம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சன் டிவி தற்போது பொங்கலன்று ஒளிபரப்பாகவுள்ள புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் வரவுள்ள நிலையில், மக்கள் அதற்கு தயாராகி வருகின்றனர். ஓமிக்ரான், கொரோனா அச்சுறுத்தல்கள் உள்ள நிலையிலும் மக்கள் பொங்கலை சிறப்பாக வரவேற்க உள்ளனர். வெளியில் செல்ல முடியாது என்றாலும் சூரிய பகவானை வீட்டிலேயே சிறப்பான வழிபாடும் மூலம் அவர்கள் வழிபட காத்திருக்கின்றனர்.

பொங்கலுக்கு புதிய படங்கள்
தீபாவளி, பொங்கல் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக புதிய திரைப்படங்களின் வருகையும் ஏராளமாக காணப்படும். அந்த வகையில் இந்த பொங்கலுக்கு வலிமை மற்றும் வீரமே வாகை சூடும் படங்கள் ரிலீசாக உள்ளன. ஆனால் தற்போது ஓமிக்ரானையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வீட்டிலேயே கொண்டாட்டம்
இதனையொட்டி மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலேயே பண்டிகையை கொண்டாடி, வீட்டிலேயே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய படங்களை பார்க்கவே மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதிய படங்களை ஒளிப்பரப்பவுள்ளன.

சன் டிவியில் அண்ணாத்த படம்
அந்த வகையில் கடந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் ரிலீசான சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படம் இந்த பொங்கலையொட்டி சன் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது. இதற்கான பிரமோவை தற்போது சன் டிவி வெளியிட்டுள்ளது.

பொங்கலன்று ஒளிபரப்பு
பொங்கலன்று மாலை 6.30 மணிக்கு அண்ணாத்த படம் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. கூடுதலாக சன் டிவிக்கே உரிய இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்ற வாசகமும், படத்தின் பிரமோ வீடியோவும் வெளியாகி வருகிறது.

சிறப்பான அண்ணாத்த படம்
கடந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ள படம் அண்ணாத்த. ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் கலர்புல்லாகவும் கலாட்டாவாகவும் அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டும் இந்தப் படம் வெளியானது.

கமர்ஷியல் அவதாரம்
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் படத்தில் ரஜினி கமர்ஷியல் அவதாரம் எடுத்திருந்தார். படத்தில் அனைத்து அம்சங்களையும் சேர்த்திருந்தார் இயக்குநர் சிவா. சிறப்பான ரஜினி படமாக அமைந்திருந்தது அண்ணாத்த. அண்ணன் -தங்கை பாசமே படத்தில் பிரதானமாக இருந்தாலும் படத்தில், காமெடி, ஆக்ஷன் சென்டிமெண்ட் அனைத்துமே தூக்கலாக அமைந்திருந்தது.
Recommended Video

ரசிகர்கள் ஆர்வம்
இந்நிலையில் இந்தப் படத்தை தொலைக்காட்சிகளில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு காரணங்களால் திரையரங்குகளில் பார்க்க முடியாதவர்கள், தங்களது குடும்பத்தினருடன் படததை தொலைக்காட்சியில் பண்டிகை கொண்டாட்டத்துடன் பார்க்க காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











