பிக்பாஸ் வீட்டில் கழுதை.. உடனே வெளியேற்றுங்கள்.. கடுப்பான பீட்டா அமைப்பு!
சென்னை: பிரபலங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்கள் என்ன சாப்பிடுவார்கள், எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள மக்களுக்கு ஆர்வம் அதிகமாகவே இருந்தது. அந்த ஆர்வம் தான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
முதலில் இந்தியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 17 சீசன்கள் முடிவடைந்து 18வது சீசன் தொடங்கி உள்ளது. இந்த 18வது சீசனையும் வழக்கம் போல சல்மான் கானே தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் 18 வது சீசனில், முதன் முதலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகையும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான ஸ்ருதிகா அர்ஜுன் கலந்து கொண்டுள்ளார். இதனால், மொத்த தமிழ் ஆடியன்சின் பார்வையும் தற்போது இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது இருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கழுதையை வெளியேற்றும்படி பீட்டா அமைப்பு கடிதம் எழுதி உள்ளது.

இந்தி பிக் பாஸ் சீசன் 18: விதவிதமான டாஸ்க்குகளை கொடுத்து போட்டியாளர்களுக்கு இடையே சண்டையை உருவாக்கி அதன் மூலம் டிஆர்பியை அதிகரிப்பது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின். அந்த வகையில்,இந்தி பிக்பாஸ் வீட்டில், காதராஜ் என பெயரிடப்பட்ட கழுதை ஒன்று உள்ளது. கார்டன் ஏரியாவில் இருக்கும் கழுதையை குடும்பத்தில் இருப்பவர்கள் தினமும் குளிப்பாட்டி, அதற்கு தீனிப்போட்டு அதை பராமரிக்க வேண்டும் இது அவர்களுக்கு ஒரு வகையான டாஸ்க்.
பீட்டா அமைப்பு கடிதம்: டிவியில் இதைப்பார்த்து கடுப்பான பீட்டா அமைப்பு, பொழுது போக்கு நிகழ்ச்சியில் இது போன்ற விலங்குகளை பயன்படுத்த வேண்டாம் என சல்மான் கானுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில், நிகழ்ச்சியில் கழுதை பயன்படுத்தப்பட்டதை பார்த்த பொதுமக்கள் புகார் அளித்திருப்பதாகவும் கூறியிருக்கும் பீட்டா, கழுதையை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், கழுதையை பயன்படுத்துவது நகைப்புக்குரிய விஷயம் கிடையாது உள்ளது என்றும்,பிக்பாஸ் வீட்டில் எழுப்பப்படும் சத்தம், விளக்குகள் எல்லாம் கழுதையை பயமுறுத்தும் எனவும் பீட்டா அமைப்பு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ் பிக் பாஸ்: தமிழ் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கிய அதே நாளில் தான் இந்தி பிக் பாஸ் தொடங்கியது. பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை சீசன் 1 முதல் 7 வரை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், 8-வது சீசனில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அவர் போட்டியாளர்களை அறிமுகம் செய்த முதல் நாளே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதில், சுனிதா, ரவீந்தர், சத்யா, ரஞ்சித், ஜாக்குலின், தீபக், ஆனந்தி, முத்துக்குமரன், சௌந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷா குப்தா, விஜே விஷால், அருண் பிரசாந்த் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். Boys Vs Girls என்ற பெயரில் 9 பெண்களும், 9 ஆண்களும் விளையாடி வருகின்றனர்.நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து சச்சனா மீண்டும், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











