நல்லா ஏமாத்துறாங்க.. கடுப்பான காடர்கள் தலைவி காயத்ரி ரெட்டி.. சர்வைவரில் என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: ஜீ தமிழில் ஆரம்பமாகி உள்ள சர்வைவர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நேற்றைய எபிசோடில் நெருப்பை அடைவதற்காக காடர்கள் மற்றும் வேடர்கள் நடுவே கடும் போட்டி நடைபெற்றது.

அதில் லக்‌ஷ்மி ப்ரியா கேப்டனாக இருக்கும் வேடர்கள் டீம் தான் வெற்றிப் பெற்றனர். இதனால், காடர்கள் தலைவியான காயத்ரி ரெட்டி அப்செட் ஆனார்.

நெருப்புக்காக

நெருப்புக்காக

தனித் தீவில் நெருப்பில்லாமல் எந்த உணவையும் சமைக்க முடியாமல் வெறும் பழங்களையும் கிழங்குகளையும் பச்சையாக திண்ண முடியாமல் தவித்துக் கொண்டிருந்த இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமாக தேவைப்படும் நெருப்பை அடைவதற்கான போட்டி நேற்று நடைபெற்றது.

கேம்ப் ஃபயர்

கேம்ப் ஃபயர்

விறகு கட்டைகளை வண்டி ஒன்றை வைத்து தள்ளிக் கொண்டே சென்று எடுத்து வந்து கேம்ஃப் ஃபயர் ஒன்றை இரு அணிகளும் உருவாக்க வேண்டும். அந்த கேம்ப் ஃபயரின் மீது கட்டப்பட்டிருக்கும் கயிறு பற்றி எரிந்து அதில் கட்டப்பட்டிருக்கும் எந்த அணியின் கொடி கீழே விழுகிறதோ அவர்களுக்குத் தான் நெருப்பு மற்றும் பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என அர்ஜுன் சொல்ல இரு அணிகளும் எப்படியாவது நெருப்பை அடைய வேண்டும் என தீவிரமாக போராடினர்.

வேடர்கள் அசத்தல்

வேடர்கள் அசத்தல்

ஆரம்பத்தில் இருந்தே வேடர்கள் அணி அந்த மர வண்டியை தள்ளுவதில் இருந்து தீ மூட்டுவதில் இருந்து அனைத்தையும் முதல் ஆளாகவே செய்தனர். காடர்கள் டீம் எல்லாவற்றிலும் சற்றே தாமதமாகவும் சொதப்பலாகவும் தான் செய்தனர்.

சத்தம் போட்ட சரண்

சத்தம் போட்ட சரண்

வேடர்கள் நேரடியாகவே கயிறுக்கு தீ வைத்து எரிக்கின்றனர் என வடசென்னை, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சரண் சத்தம் போட்டார். ஆனால், உடனடியாக விக்ராந்த் அவரை சமாதானம் செய்தார். அடிக்கடி இரு அணிகளுக்கும் இடையே சூடான விவாதங்களும் மோதல்களும் நடந்தன.

Recommended Video

படத்தோட கதைய கேட்டு சிரிச்சிட்டே இருந்தேன் | Athulya Ravi | Murungakkai chips | Filmibeat Tamil
வேடர்கள் வெற்றி

வேடர்கள் வெற்றி

அசத்தலாக ஆரம்பித்த நிலையில், இடையே நெருப்பு சரியாக எரியாமல் வேடர்கள் வெல்வார்களா? காடர்கள் வெல்வார்களா? என்கிற நிலை உருவானது. ஆனால், கடைசியில் பெசன்ட் ரவி பற்ற வைத்த தீ கயிற்றை காலி செய்து வேடர்களுக்கு வெற்றியை பெற்றுத் தந்தது.

என்ன பரிசு

என்ன பரிசு

போட்டியிட்ட இரு அணிகளுக்கும் நெருப்பு கிடைக்கும் வகையில் வழி செய்த நடிகர் அர்ஜுன் வெற்றிப் பெற்ற வேடர்கள் அணிக்கு பிரத்யேகமாக பரிசு பொருட்களையும் அள்ளிக் கொடுத்தார். படுக்கைகள், நாற்காலி, தார் பாய் உள்ளிட்ட விஷயங்களை பரிசாக வேடர்கள் பார்த்ததுமே சந்தோஷமடைந்தனர். அதே சமயம் காடர்களின் தலைவி காயத்ரி ரெட்டி மற்றும் அந்த அணியினர் ரொம்பவே கடுப்பானார்கள்.

ஏமாற்றி ஜெய்ச்சாங்க

ஏமாற்றி ஜெய்ச்சாங்க

காடர்களின் தலைவி காயத்ரி ரெட்டி தனியாக வந்து அமர்ந்து கேமரா முன் புலம்பும் போது வேடர்கள் ஆரம்பத்தில் இருந்தே பல மோசடி வேலைகளை செய்து ஏமாற்றி தான் செய்ச்சாங்க என பரிசு கிடைக்காத விரக்தியில் புலம்ப ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி தன்னுடைய டீமில் உள்ள ஆண் போட்டியாளர்கள் அத்தனை திறமைசாளிகளாக இல்லை என்பது போல அவர்களிடமும் சண்டை போட ஆரம்பித்துள்ளார். இன்றைய எபிசோடில் நடிகர் விக்ராந்துக்கும் காயத்ரி ரெட்டிக்கும் கடுமையான சண்டை காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X