19 வயசு பொண்ண இப்படி உடைச்சு அனுப்பிட்டீங்களே... காட்டுக்குள் வெடித்த மோதல்... சர்வைவர் புரமோ!

சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியின் புரமோவில் இந்திரஜா ஷங்கர் வெளியேற்றப்பட்டது குறித்து போட்டியாளர்கள் டிஸ்கஸ் செய்வது தெரியவந்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷனாக வேடர்கள் டீம்மில் இருந்து சிருஷ்டி டாங்கேவும், காடர்கள் டீம்மில் இருந்து இந்திராஜாவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஒரு 19 வயசு பொண்ண

ஒரு 19 வயசு பொண்ண

தீவில் இருந்து வெளியேறிய அவர்கள் மூன்றாம் உலகம் என மற்றொரு தீவில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியின் இன்றைய புரமோ வெளியாகியுள்ளது. இதில் பேசும் விஜயலக்ஷ்மி, ஒரு 19 வயசு பொண்ண எலிமினேட் பண்ணி அனுப்பியது அன்ஃபேர் என கூறுகிறார்.

மீண்டும் மனஸ்தாபம்

மீண்டும் மனஸ்தாபம்

நேற்றைய எபிசோடின் எலிமினேஷன் குறித்து இன்றைய எபிசோடில் பேசப்படுகிறது. இதனால் போட்டியாளர்களுக்கு இடையே எலிமினேஷன் தொடர்பாக மீண்டும் மனஸ்தாபம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதேபோல் இன்றைய எபிசோடுக்கான மற்றொரு புரமோ வெளியாகியுள்ளது.

கடலுக்குள் மேடை

கடலுக்குள் மேடை

இதனை தொடர்ந்து மற்றொரு புரமோவில் இம்யூனிட்டி சேலஞ்ச் கொடுக்கப்படுவது தெரியவந்துள்ளது. காடர்களுக்கும் வேடர்களுக்கும் இம்யூனிட்டி சேலஞ்சை அறிவிக்கிறார் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் அர்ஜுன். அதன் படி கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள மேடையில் நிற்கிறார் நடிகர் அர்ஜுன்.

ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கம்

ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கம்

அவருக்கு இரண்டு பக்கமும் இரண்டு தென்னை மரங்கள் போடப்பட்டு ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு போட்டியாளர்கள் மாற வேண்டும். ஒவ்வொரு போட்டியாளரை பிடித்தப்படியே மாறி மாறி போட்டியாளர்கள் செல்ல வேண்டும்.

தடுமாறி விழுந்த சரண்

தடுமாறி விழுந்த சரண்

இந்த போட்டியில் தோற்கும் போட்டியாளர்கள் எலிமினேஷன் தான் என்று இடையில் காஷன் கொடுக்கிறார் அர்ஜுன். இதில் சரண் பேலன்ஸ் செய்ய முடியாமல் கீழே உட்கார, கீழே உட்காரக் கூடாது என எச்சரிக்கிறார் அர்ஜுன். அப்போது மற்ற போட்டியாளர்களை பிடித்து பேலன்ஸ் செய்தபடி எழுந்திருக்கிறார் சரண்.

இன்னைக்கும் இருக்கு

இன்னைக்கும் இருக்கு

இதில் மரத்தின் மீது நிற்கும் மற்ற போட்டியாளர்களும் கீழே சரிந்து விழுகின்றனர். இப்படியாக உள்ளது சர்வைவர் நிகழ்ச்சியின் மற்றொரு புரமோ. இதனை பார்த்த ரசிகர்கள் சரணால் தோற்கும் மொத்த பேரும் இன்று அவரை வச்சு செய்யப் போகிறார்கள் என கூறி வருகின்றனர். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X