அம்மாவுக்கு கேன்சர்... எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியல.. கலங்கும் நாராயண் லக்கி.. சர்வைவர் புரமோ!

சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புரமோவில் நடிகர் நாராயண் லக்கி கண்ணீர் விட்டு அழும் காட்சி வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி ரசிகர்களின் கவனத்தை பெற தொடங்கியுள்ளது.

டாஸ்க்குகளை தாண்டியும் ஒருவர் பின்னால் ஒருவர் புறணி பேசுவது, சண்டை போடுவது, பற்ற வைப்பது என பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக செல்கிறது சர்வைவர்.

நடிகர் நாராயண் லக்கி

நடிகர் நாராயண் லக்கி

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகியுள்ளது. இதில் காட்டில் கேங்காக அமர்ந்து பேசுகின்றனர் போட்டியாளர்கள். அப்போது நடிகர் நாராயண் லக்கி தனது சினிமா அனுபவம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.

இனிது இனிது பட ஷூட்டிங்

இனிது இனிது பட ஷூட்டிங்

அதன்படி தனக்கு இனிது இனிது படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு மற்றும் தான் நடித்ததை எப்படி படமாக்கினார்கள் என்று கூறிய நாராயண் லக்கி, ஷூட்டிங்கின் போது கேமரா எங்கு வைக்கப்பட்டிருந்தது என்றே தெரியவில்லை என்றார். ஆனால் தான் நடித்து முடித்ததும் அந்த காட்சி நேட்சுரலாக இருக்கிறது என்று கூறினார்கள் என்றும் அவர் சக போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அம்மாவுக்கு கேன்சர்.. கண்ணீர்விட்ட நாராயண் லக்கி

அம்மாவுக்கு கேன்சர்.. கண்ணீர்விட்ட நாராயண் லக்கி

தொடர்ந்து பேசிய நாராயண் லக்கி, தனது அம்மா தனக்கு பெரிய சப்போர்ட் என்றார். மேலும் தனது அம்மாவுக்கு கேன்சர் என்று தெரிய வந்ததும் அதனை எப்படி ஹேண்டில் செய்வது என்று தெரிய வில்லை என்று கூறியும் கண்ணீர் விட்டார். அவர் சொல்வதை கேட்டு ஆரம்பத்தில் சிரித்து கொண்டிருந்த போட்டியாளர்கள் இறுதியில் அவரது அம்மா குறித்து பகிர்ந்த தகவலை கேட்டு கண்ணீர் விட்டனர்.

Recommended Video

Survivor Contestants PHONE use பண்றாங்களா? | தினமும் எப்படி Promotional Post
பல படங்களில் சப்போர்ட்டிங் ரோல்

பல படங்களில் சப்போர்ட்டிங் ரோல்

நடிகர் நாராயண் லக்கி தம்பிக்கு இந்த ஊரு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து இனிது இனிது படத்தில் லீடிங் ரோலில் நடித்தார். தொடர்ந்து பயணம், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆறு, என்றென்றும் புன்னகை, திறந்திடு சீசே, இனிமே இப்படிதான், பூலோகம், அழகு குட்டி செல்லம் உள்ளிட்ட பல படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்துள்ளார்.

திறமையை காட்டும் மேடை

திறமையை காட்டும் மேடை

கடைசியாக சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தில் அஷ்வின் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் நாராயண் லக்கி. இதில் வில்லத்தனமாகவும் காமெடியாகவும் நடித்து கலக்கியிருந்தார் நாராயண் லக்கி. தற்போது தன்னுடைய திறமையை காட்டும் மேடையாக சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X