கடலில் தத்தளிக்கும் போட்டியாளர்கள்.. அலற விடும் அர்ஜூன்.. பகீர் கிளப்பும் சர்வைவர் புரமோ!

சென்னை: சர்வைவர் ரியாலிட்டி ஷோவின் புரமோ வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

மேற்கத்திய நாடுகளில் ஹிட்டான பல நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் ஒளிபரப்பாகி வெற்றி கண்டு வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ், மாஸ்டர் செஃப் போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது சர்வைவர். 2000ஆம் ஆண்டில் அமெரிக்க தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

ஜீ தமிழ் தொலைக்காட்சி

ஜீ தமிழ் தொலைக்காட்சி

சுமார் 40 சீசன்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. ஹிட் ஷோவான இந்த நிகழ்ச்சி தற்போது தமிழிலும் தொடங்கப்பட்டுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

90 நாட்கள் தாக்கு பிடிக்க வேண்டும்

90 நாட்கள் தாக்கு பிடிக்க வேண்டும்

இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அடிப்படை தேவையான பொருட்களுடன் தனித் தீவில் விடப்படும் இந்த போட்டியாளர்கள் 90 நாட்கள் கிடைக்கும் பொருட்களை கொண்டு தாக்கு பிடிக்க வேண்டும். இதில் 90 நாட்கள் தாக்கு பிடிக்கும் போட்டியாளருக்கு சர்வைவர் டைட்டில் மற்றும் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். கிட்ட தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே உள்ளது இந்த நிகழ்ச்சி.

காட்டுக்குள் நடக்கும் சம்பவம்

காட்டுக்குள் நடக்கும் சம்பவம்

பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் மற்றும் போட்டியாளரின் மன நிலையை சோதிக்கும் வகையில் இருக்கும். ஆனால் சர்வைவர் நிகழ்ச்சி காட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் மற்றும் போட்டியாளர்களின் மன தைரியம் மன வலிமையையும் தன் உடல் வலிமையையும் சோதிக்கும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.

16 போட்டியாளர்கள் பங்கேற்பு

16 போட்டியாளர்கள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் சினிமா துறையை சம்மந்தப்பட்டவர்களே பங்கேற்றுள்ளனர். நடிகர் விக்ராந்த், நடிகை சிருஷ்டி டாங்கே, பெசன்ட் ரவி, அம்ஜத் கான், விஜே பார்வதி, லட்சுமி பிரியா, சிங்கப்பூர் ராப் பாடகர் லேடி காஷ், காய்த்ரி ரெட்டி, உமாபதி ராமையா, நந்தா, விஜயலட்சுமி, இந்திரஜா சங்கர், சரண் சக்தி, நாராயணன் லக்கி, ராம் சி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன்

ஆக்ஷன் கிங் அர்ஜுன்

இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் புரமோக்கள் வெளியாகி வருகிறது. அதன்படி இன்றைய நிகழ்ச்சிக்கான புரமோவில் காடர்கள் VS வேடர்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கடலுக்கு நடுவில் நிற்கும் படகில் போட்டியாளர்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.

படகில் உள்ள உணவு பொருட்கள்

படகில் உள்ள உணவு பொருட்கள்

கரையில் நிற்கும் போட்டியாளர்கள் கடலில் நீந்தியப்படி சென்று படகில் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு வர வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கயிறு கட்டிய கூடைகளுடன் கடலுக்குள் செல்கின்றனர். தத்தி தாவி படகில் இருக்கும் பொருட்களை எடுக்க முயற்சிக்கின்றனர்.

கும்மிருட்டு.. நடுங்க வைக்கும் குளிர்

கும்மிருட்டு.. நடுங்க வைக்கும் குளிர்

இதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தெரியவரும். இதேபோல் இந்நிகழ்ச்சிக்கான மற்றொரு புரமோவில் கும்மிருட்டு மற்றும் நடுங்க வைக்கும் குளிரில் நடுங்கியப்படி உள்ளனர். ஒரு போட்டியாளர் இரண்டு துணிகள் மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்பதால் ஆண் போட்டியாளர்கள் லுங்கி கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும்

ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும்

லுங்கியை இடுப்பிலும் கட்டிக்கொள்ளலாம், கீழே படுக்கையாகவும் போர்வையாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறுகின்றனர். புரமோக்களை பார்க்கும் நிச்சயம் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று சர்வைவர் நிகழ்ச்சியும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X