நெருப்பு டாஸ்க்கில் புகையும் பிரச்சனை.. இன்னைக்கு எண்டெர்டெய்ன்மென்ட் இருக்கு.. சர்வைவர் புரமோ!

சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புரமோ வெளியாகி உள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.

16 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் காட்டுக்குள் 90 நாட்கள் இருக்க வேண்டும்.

வெடிக்கும் மோதல்கள்

வெடிக்கும் மோதல்கள்

ஒவ்வோரு நாளும் விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு டாஸ்க்கும் உடல் வலிமையையும் மன வலிமையையும் சோதிக்கும் வகையில் உள்ளது. இதில் போட்டியாளர்களுக்கு இடையே மோதல்களும் வெடிக்க தொடங்கியுள்ளது.

சிறு விஷயத்தை பெரிதாக்கிய பார்வதி

சிறு விஷயத்தை பெரிதாக்கிய பார்வதி

நேற்று விஜே பார்வதிக்கும் நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிறு விஷயத்தை பெரிது படுத்தி சிருஷ்டி டாங்கேவை வில்லியாக்க முயன்றார் விஜே பார்வதி. தன்னுடைய பிரச்சனையை பட்டென பேசி முடிக்காமல் வலவல என பேசிக் கொண்டிருந்தார் பார்வதி. அவர் சின்ன பிரச்சனையை பெரிதாக்கி நீண்ட நேரம் பேசியது, மற்றவர்கள் மீது குறை சொன்னது என எல்லாமே அவர் தன் மீது மற்றவர்களின் கவனம் வர வேண்டும் என்பதற்காக செய்வதாக தெரிகிறது.

பிரம்மாண்ட மரப் பெட்டிகள்

பிரம்மாண்ட மரப் பெட்டிகள்

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது. அதன் படி முதல் புரமோவில் மரத்தாலான பெரிய பெட்டியை போட்டியாளர்கள் தள்ளி வர வேண்டும். இரண்டு குழுக்களாக உள்ள போட்டியாளர்களுக்கு இரண்டு பிரம்மாண்ட மரப் பெட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை எந்த டீம் முதலில் குறிப்பிட்ட தூரத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என தெரிகிறது.

நெருப்பு டாஸ்க் - பிரச்சனை

நெருப்பு டாஸ்க் - பிரச்சனை

இந்த போட்டியில் போட்டியாளர்கள் உடலை வருத்திக் கொண்டு கொளுத்தும் வெயிலில் அந்த மரப் பெட்டியை குழுவாக சேர்ந்து தள்ளிக் கொண்டு வருகிறார்கள். இதேபோல் மற்றொரு புரமோவில் போட்டியாளர்களுக்கு நெருப்பை வைத்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் போட்டியாளர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படும் என தெரிகிறது.

இன்றும் சண்டை இருக்கு

இன்றும் சண்டை இருக்கு

இரண்டாவது டாஸ்க்கின் போது சீட்டிங் என்று கூறும் சரண், ரவிண்ணா தூக்காதீங்கன்னு சொல்றேன்ல என்கிறார். மற்ற போட்டியாளர்களின் ரியாக்ஷனும் வேறு மாதிரி உள்ளது. புரமோவுக்கும் நிகழ்ச்சிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். இருப்பினும் சர்வைவர் நிகழ்ச்சி டாஸ்க்குகள் ஒரு புறம் இருக்க சண்டை சச்சரவு என மறுபுறம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

 கண்ணீர் விடும் போட்டியாளர்கள்

கண்ணீர் விடும் போட்டியாளர்கள்

இதேபோல் மற்றொரு புரமோவில் ஸ்டன்ட் நடிகரான பெசன்ட் ரவி தனது குடும்பத்தை நினைத்த கண்ணீர் விடும் காட்சி இடம் பெற்றுள்ளது. அப்போது சக போட்டியாளர்கள் இங்கு நாம் தான் குடும்பம் என அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். இப்படியாக உள்ளது இரண்டாவது புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X