சிம்பிளா முடிந்த திருமணம்.. மாலத்தீவுக்கு ஹனிமூனுக்கு பறந்த ஜோடி.. யாருன்னு பாருங்க!
சர்வைவர் தமிழ் போட்டியாளர் ஐஸ்வர்யா கிருஷ்ணனுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில், தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். அங்கே கணவருடன் தண்ணீரில் குளித்து விளையாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
ஜீ தமிழில் கடந்த ஆண்டு பிக் பாஸுக்கு போட்டியாக அர்ஜுன் ஹோஸ்ட் செய்ய ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் ஐஸ்வர்யா கிருஷ்ணன்.

இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக நீச்சல் உடை புகைப்படங்களை போட்டுத் தாக்கி வந்த ஐஸ்வர்யா கிருஷ்ணன் அதற்குள் திருமணம் செய்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார்.
சர்வைவர் புகழ் ஐஸ்வர்யா கிருஷ்: விஜய் டிவியின் பிக்பாஸுக்கு போட்டியாக ஜீ தமிழில் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஒளிபரப்பானது. ஏகப்பட்ட பிரபலங்களை வைத்து 1 கோடி பரிசு என்றெல்லாம் அறிவிக்கப்பட்ட அந்த ஷோ முதல் சீசனை விட மூட்டை முடிச்சை கட்டி விட்டது. விஜே பார்வதி, உமாபதி ராமைய்யா, விஜயலக்ஷ்மி, இந்திரஜா ஷங்கர், நந்தா, சிருஷ்டி டாங்கே உடன் சேர்ந்து ஐஸ்வர்யாவும் அதில் பங்கேற்றார்.
ஜிம் டிரெய்னர்: ஃபிட்னஸ் டிரெயினரான ஐஸ்வர்யா கிருஷ்ணன் பல சினிமா பிரபலங்களுக்கும் ஜிம் டிரெய்னராக பயிற்சி அளித்து வந்தார். சினிமா மற்றும் மாடலிங்கில் அவருக்கு இருந்த இன்ட்ரெஸ்ட் காரணமாக அப்படியே இன்ஸ்டாகிராம் பியூட்டியாக மாறிய ஐஸ்வர்யா கிருஷ்ணன் ஜீ தமிழில் சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார்.

திருமணம்: சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா கிருஷ்ணன் தனது காதலரை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்திய நிலையில், அவருடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட புகைப்படங்களையும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துகளை அள்ளியிருந்தார்.
மாலத்தீவில் ஹனிமூன்: ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா திருமணம் முடிந்து ரெசார்ட் ஒன்றில் ஹனிமூன் கொண்டாடி வரும் நிலையில், ஐஸ்வர்யா கிருஷ்ணன் தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூனுக்கு சென்றுள்ளார். அங்கே இருவரும் எடுத்துக் கொண்ட மஜாவான புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றன.

ஒரே ரொமான்ஸ் தான்: சர்வைவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன் மாலத்தீவில் சென்று ஜிம்னாஸ்டிக் செய்யாமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கலாய்த்து வரும் நிலையில், நீச்சல் குளத்தில் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











